கேஐசிஎஸ் போட்டிகள் : வாலிபால் போட்டியில் குமரகுரு கல்லூரி சாம்பியன் பட்டம் வென்றது

கோவை: குமரகுரு தொழில்நுட்ப கல்லூரி நடத்திய கேஐசிஎஸ் போட்டியில், வாலிபால் விளையாட்டில் அக்கல்லூரி அணி சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது.



கோவை: குமரகுரு தொழில்நுட்ப கல்லூரி நடத்திய கேஐசிஎஸ் போட்டியில், வாலிபால் விளையாட்டில் அக்கல்லூரி அணி சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது.



குமரகுரு கல்லூரி சார்பில் பல்வேறு கல்லூரிகளுக்கு இடையேயான விளையாட்டுப் போட்டிகள் (கேஐசிஎஸ்) நடத்தப்பட்டது. கடந்த 15-ம் தேதி தொடங்கிய இந்த போட்டியில் வாலிபால், தடகளம், பேட்மிட்டன், செஸ், கிரிக்கெட், கோ-கோ உள்ளிட்ட பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் இடம்பெற்றிருந்தன.



இந்த சூழலில், நேற்று வாலிபால் இறுதி போட்டிகள் நேற்று அக்கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. இதில் கே.சி.டி மற்றும் அவினாசிலிங்கம் பல்கலைக்கழகம் அணிகள் மோதின. இதில், குமரகுரு கல்லூரி வெற்றிபெற்று சாம்பியன் பட்டத்தை வென்றது.

இதே போல், கூடைப்பந்து இறுதி போட்டியில் ஸ்ரீ ஈஸ்வர் பொறியியல் கல்லூரி காருண்யா பல்கலைக்கழகம் அணியை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது. மேலும், எறி பந்து போட்டியில் பி.எஸ்.ஜி பொறியியல் கல்லூரி அணி கே.சி.டி அணியை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்றது.

Newsletter