பேட்மிட்டன் போட்டியில் வெற்றி பெற்ற போலீசாரை பாராட்டிய ஆணையர்

கோவை: கோவையில் கேரளா கிளப் சார்பில் பேட்மிட்டன் போட்டிகள் கடந்த 4-ம் தேதி தொடங்கி நடைபெற்றது.

கோவை: கோவையில் கேரளா கிளப் சார்பில் பேட்மிட்டன் போட்டிகள் கடந்த 4-ம் தேதி தொடங்கி நடைபெற்றது.

இதில், காவல்துறை, பத்திரிகை துறை மற்றும் கேரளா கிளப் சார்பில் 25 அணிகள் கலந்து கொண்டன. இதன் இறுதிப்போட்டி எ.டி.டி. காலனியில் உள்ள கேரளா கிளப்பில் நேற்று (16-ம் தேதி) நடைபெற்றது. இதில், காவல்துறை அணிக்கு விளையாடிய பிரவின் கணேஷ் மற்றும் லோகேஷ் அணி வெற்றிபெற்றது.

தொடர்ந்து, அவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. பரிசுகளை மாநகர காவல் ஆணையர் பெரியய்யா, உதவி ஆணையர் நாகராஜ், தினமலர் நிருபர் செல்வகுமார், கேரளா கிளப் தலைவர் குமரன் ஆகியோர் வழங்கினர்.

Newsletter