கல்லூரிகளுக்கு இடையிலான பெண்கள் பேட்மிண்டன் போட்டி : பி.எஸ்.என்.ஏ., கல்லூரி அணி சாம்பியன்

கோவை : கல்லூரிகளுக்கு இடையிலான பெண்கள் பேட்மிண்டன் போட்டியில் பி.எஸ்.என்.ஏ., பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி அணி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.

கோவை : கல்லூரிகளுக்கு இடையிலான பெண்கள் பேட்மிண்டன் போட்டியில் பி.எஸ்.என்.ஏ., பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி அணி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. 

குமரகுரு கல்லூரியில் நடைபெற்ற இந்தப் போட்டியின் இறுதிப் போட்டியில் திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த பி.எஸ்.என்.ஏ., பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி, நாமக்கல்லைச் சேர்ந்த பாவை பொறியியல் கல்லூரி அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இதில், 32-25, 30-35, 35-32 என்ற செட் கணக்கில் பி.எஸ்.என்.ஏ., கல்லூரி அணி சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றியது. 3-வது இடத்திற்கான போட்டியில், காருண்யா தொழில்நுட்பக் கல்லூரி, குமரகுரு தொழில்நுட்பக் கல்லூரியை 35-15, 35-14 என்ற நேர் செட் கணக்கில் எளிதில் வீழ்த்தி வெற்றி பெற்றது.

இதேபோல, ஆண்கள் பிரிவில் பாவை பொறியியல் கல்லூரியும், அக்ஷயா மற்றும் ஆதித்யா பொறியியல் கல்லூரிகள் 3-வது மற்றும் 4-வது இடத்தைப் பிடித்தன.

Newsletter