மாநில அளவில் பள்ளிகளுக்கு இடையிலான ஜி.எஸ்.எல்., கால்பந்து போட்டி இன்று தொடக்கம்

கோவை: மாநில அளவில் பள்ளிகளுக்கு இடையிலான ஜி.எஸ்.எல்., கால்பந்து போட்டித் தொடர் கோவை நேரு மைதானத்தில் இன்று தொடங்கியது.

கோவை: மாநில அளவில் பள்ளிகளுக்கு இடையிலான ஜி.எஸ்.எல்., கால்பந்து போட்டித் தொடர் கோவை நேரு மைதானத்தில் இன்று தொடங்கியது. 



இன்று முதல் 3 நாட்கள் நடக்கும் ஜி.எஸ்.எல்., எனப்படும் கோயித்தே சூப்பர் லீக் போட்டித் தொடரில் ஆண்கள் பிரிவில் 16 அணிகளும், பெண்கள் பிரிவில் 8 அணிகளும் கலந்து கொண்டுள்ளன. ஒவ்வொரு மாவட்டத்திலும் இதேப்போன்று நடக்கும் போட்டித் தொடரில் முதலிரண்டு இடங்களைப் பிடிக்கும் ஆண்கள் அணிகளும், சாம்பியன் பட்டம் வெல்லும் பெண்கள் அணியும் தேர்வு செய்யப்படும்.

இதேபோல, கோவையில் இருபிரிவுகளிலும் முதலிரண்டு இடங்களைப் பிடிக்கும் அணிகள், சென்னையில் 20 முதல் 23-ம் தேதி வரை நடைபெறும் மாநில அளவிலான இறுதிப் போட்டிகளில் பங்கேற்க உள்ளனர். 



ஒவ்வொரு போட்டிகளும் 40 நிமிடங்கள் நடத்தப்படுகின்றன. இதில், வெற்றி பெறும் அணிகள் மற்றும் வீரர்களுக்கு மொத்தம் ரூ. 2 லட்சம் மதிப்பிலான பரிசுப் பொருட்கள் வழங்கப்பட இருக்கிறது. 

Newsletter