ஸ்ரீ சக்தி டி-20 கிரிக்கெட் போட்டிகள் : கோப்பையை கைப்பற்றியது ஏ.வி.எம் ராஜேஸ்வரி பள்ளி

கோவை: ஸ்ரீ சக்தி பொறியியல் கல்லூரி சார்பில் பள்ளி மாணவர்களுக்கான மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகள் 'ஸ்ரீ சக்தி சூப்பர் டி-20' கடந்த 6-ம் தேதி தொடங்கி 13-ம் தேதி வரை நடைபெற்றது.

கோவை: ஸ்ரீ சக்தி பொறியியல் கல்லூரி சார்பில் பள்ளி மாணவர்களுக்கான மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகள் 'ஸ்ரீ சக்தி சூப்பர் டி-20' கடந்த 6-ம் தேதி தொடங்கி 13-ம் தேதி வரை நடைபெற்றது.

இதன் இறுதி போட்டியின் நேற்று (திங்கட்கிழமை) ஸ்ரீ சக்தி கல்லூரி மைதானத்தில் நடைபெற்றது. இறுதி போட்டியில் சென்னை ஏவிஎம் ராஜேஸ்வரி பள்ளியும், டான் போஸ்கோ பள்ளியும் மோதின.

முதலில் களமிறங்கிய ஏவிஎம் ராஜேஸ்வரி பள்ளி 104 ரன்கள் குவித்தது. தொடர்ந்து விளையாடிய டான் போஸ்கோ அணி 83 ரன்களில் ஆட்டம் இழந்தது.

இதனைத் தொடர்ந்து வெற்றி பெற்ற அணிக்கு ரூ.1 லட்சம் பரிசு வழங்கப்பட்டது. டான் போஸ்கோ அணிக்கு ரூ.50 ஆயிரம், இரண்டு மற்றும் மூன்றாம் இடம் பிடித்த அணிகளுக்கு தலா ரூ.30 ஆயிரம் மற்றும் ரூ.20 ஆயிரம் பரிசாக வழங்கப்பட்டது.

Newsletter