மாநில அளவிலான டென்னிஸ் போட்டியில் வென்ற கோவை வீரர்கள்

கோவை: மோக்சி டென்னிஸ் பள்ளி நடத்திய இந்த போட்டி துடியலூரில் உள்ள அப்பள்ளி மைதானத்தில் கடந்த 11-ம் தேதி முதல் 12-ம் தேதி வரை நடைபெற்றது.

கோவை: மோக்சி டென்னிஸ் பள்ளி நடத்திய இந்த போட்டி துடியலூரில் உள்ள அப்பள்ளி மைதானத்தில் கடந்த 11-ம் தேதி முதல் 12-ம் தேதி வரை நடைபெற்றது.

மாநில அளவிலான இரண்டு நாள் போட்டியில் கோவை, திருப்பூர், கரூர், ஈரோடு, தஞ்சை, திண்டுக்கல் மற்றும் நெய்வேலி ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த நூறு வீரர்கள் கலந்து கொண்டனர்.   

இதில் ஆடவர் ஒற்றையர் பிரிவில் கண்ணன் மற்றும் பாலாஜி ஆகியோருக்கு இடையேயான போட்டியில் 9-4 என்ற புள்ளிகள் கணக்கில் கோவையை சேர்ந்த கண்ணன் வெற்றி பெற்றார்.

இரட்டையர் பிரிவில், கண்ணன் மற்றும் சூர்யா இளங்கோவன் அணி வெற்றி பெற்று செம்பியன் பட்டத்தை வென்றது.

வெற்றி பெற்றவர்களுக்கு ரூ.25 ஆயிரம் பரிசு மற்றும் கோப்பைகள் வழங்கப்பட்டது. இதில் கண்ணன், ஒற்றையர் மற்றும் இரட்டையர் போட்டியில் தங்கம் வென்றார்.

Newsletter