சுகுணா பள்ளியில் நடைபெற்ற தேசிய அளவிலான வினாடி-வினா போட்டி

கோவை: கோவை சுகுணா பிப் பள்ளியில் தேசிய அளவிலான வினாடி-வினா போட்டிகள் நேற்று (சனிக்கிழமை) நடைபெற்றன. சென்னை ஐ.ஐ.டி கல்லூரியின் ஷாஷ்டிரா என்ற விழாவை முன்னிட்டு இந்த போட்டி கோவையில் நடைபெற்றது.

கோவை: கோவை சுகுணா பிப் பள்ளியில் தேசிய அளவிலான வினாடி-வினா போட்டிகள் நேற்று (சனிக்கிழமை) நடைபெற்றன. சென்னை ஐ.ஐ.டி கல்லூரியின் ஷாஷ்டிரா என்ற விழாவை முன்னிட்டு இந்த போட்டி கோவையில் நடைபெற்றது.

தொழில்நுட்பம், பொது அறிவு உள்ளிட்ட தலைப்புகளின் கீழ் இந்த போட்டி நடத்தப்பட்டது. 60 மாணவர்கள் கலந்து கொண்ட இந்த போட்டியில் ஐந்து குழுக்கள் இறுதிப் போட்டிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளன.

மோனிஷ் கிரண், தினேஷ் ஆகிய ஆகிய மாணவர்கள் முதலிடம் பிடித்தனர். தொடர்ந்து, சுகுணா பிப் பள்ளியை சேர்ந்த க்குள் ஆதித்யா ஆதேஷ் விக்ரம் ஆகிய பத்தாம் வகுப்பு மாணவர்கள் இரண்டாம் இடத்தைப் பிடித்தனர்.

போட்டியில் பங்கு பெற்றோருக்கு சான்றிதழ்கள் மற்றும் பதக்கங்கள் வழங்கப்பட்டன. தற்போது தேர்வு செய்யப்பட்டுள்ள ஐந்து குழுக்களும் 'கே ஸ்டெடி' என்ற போட்டியில் பங்கேற்க உள்ளன. 

இதில் வெற்றி பெறுபவர்கள் சென்னை ஐஐடி-யில் நடைபெறும் போட்டியில் பங்கேற்கிறார்கள்.

Newsletter