காது கேளாதோர் விளையாட்டு போட்டிகளில் சாம்பியன் பட்டம் வென்றது திருப்பூர்

திருப்பூர்: தமிழ்நாடு விளையாட்டு கழகம் சார்பில் கோவையில் 9-வது காது கேளாதோர் விளையாட்டு போட்டிகள் ஆகஸ்ட் 10-11 ஆகிய தேதிகளில் நடைபெற்றன.

திருப்பூர்: தமிழ்நாடு விளையாட்டு கழகம் சார்பில் கோவையில் 9-வது காது கேளாதோர் விளையாட்டு போட்டிகள் ஆகஸ்ட் 10-11 ஆகிய தேதிகளில் நடைபெற்றன.

25 மாவட்டங்களில் இருந்து 350-க்கும் மேற்பட்ட விளையாட்டு வீரர்கள் இந்த போட்டியில் கலந்து கொண்டனர். 18 முதல் 65 வயது வரையிலான விளையாட்டு வீரர்கள் கலந்து கொண்ட இந்த போட்டியில், பல்வேறு தடகள போட்டிகள், வாளிபால் மற்றும் பேட்மிட்டன் போட்டிகள் நடைபெற்றது.

இந்த போட்டியில், திருப்பூர் மாவட்டம் ஒட்டு மொத்த சாம்பியன்சிப் பட்டத்தை வென்றது. இதில் வெற்றி பெற்றவர்கள் தேசிய அளவில் பூனே-வில் நடைபெற உள்ள விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்க உள்ளது குறிப்பிடத்தக்கது. 

Newsletter