கே.பி.ஆர்., கோப்பை கிரிக்கெட் போட்டி : ஸ்ரீ சக்தி பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி சாம்பியன்

கோவை: கல்லூரிகளுக்கு இடையிலான கே.பி.ஆர்., கோப்பை கிரிக்கெட் போட்டியில் ஸ்ரீ சக்தி பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி அணி சாம்பியன் பட்டத்தை வென்றது.

கோவை: கல்லூரிகளுக்கு இடையிலான கே.பி.ஆர்., கோப்பை கிரிக்கெட் போட்டியில் ஸ்ரீ சக்தி பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி அணி சாம்பியன் பட்டத்தை வென்றது. 



கே.பி.ஆர்., பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் கடந்த 3-ம் தொடங்கி இந்தப் போட்டித் தொடரில் 30 அணிகள் கலந்து கொண்டன. பல்வேறு ஆட்டங்கள் முடிவில் இறுதிப் போட்டிக்கு ஸ்ரீ சக்தி பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி மற்றும் கோயம்புத்தூர் தொழில்நுட்பக் கல்லூரி அணிகள் முன்னேறின. இன்று நடைபெற்ற இறுதிப் போட்டியில் முதலில் பேட் செய்த ஸ்ரீ சக்தி பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 144 ரன்கள் சேர்த்தது. ப்ரீத்தம் (37), பழனி (35) அதிகபட்ச ரன்களை குவித்தனர். 



இதைத் தொடர்ந்து, களமிறங்கிய கோயம்புத்தூர் தொழில்நுட்பக் கல்லூரி அணியின் பேட்ஸ்மேன்கள், எதிரணியின் பந்துவீச்சைத் தாக்குப்பிடிக்க முடியாமல் விக்கெட்டுக்களை இழந்தனர். இதனால், அந்த அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 86 ரன்களை மட்டுமே எடுத்தது. அதிகபட்சமாக விக்ரம் 32 ரன்களை குவித்தார். இதன்மூலம், ஸ்ரீ சக்தி பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி 58 ரன்கள் வித்தியாசத்தில் எளிதில் வெற்றி பெற்று, கே.பி.ஆர்., கோப்பையை தட்டிச் சென்றது. 

Newsletter