சுதந்திர தினத்தை முன்னிட்டு மினி மாரத்தான் போட்டி : மாணவர்கள் ஆர்வமுடன் பங்கேற்பு

நீலகிரி: உதகையில் வெலிங்டன் ராணுவ முகாமில் நடைபெற்ற சுதந்திர தின மினி மாரத்தான் போட்டியில் ஏராளமான மாணவர்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டனர்.

நீலகிரி: à®‰à®¤à®•ையில் வெலிங்டன் ராணுவ முகாமில் நடைபெற்ற சுதந்திர தின மினி மாரத்தான் போட்டியில் ஏராளமான மாணவர்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டனர். 

72-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு வெலிங்டன் ராணுவ முகாம் சார்பில் மினி மாரத்தான் போட்டி நேற்று நடந்தது. இளைஞர்களை ராணுவத்தில் சேர ஊக்கப்படுத்தும் விதமாகவும், உடற்பயிற்சி மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கை முறை பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தவும் இந்த ஓட்டப்பந்தயம் நடத்தப்பட்டது. இதில், வெலிங்டனில் உள்ள பல்வேறு பள்ளிகளைச் சேர்ந்த 300 மாணவர்கள் பங்கேற்றனர். போட்டிகள் அனைத்தும் வெலிங்டன் தங்கராஜ் மைதானத்தில் இருந்து தொடங்கியது.

10-12 வயதுக்குட்பட்டோருக்கான பிரிவில் ஹோலி பள்ளியைச் சேர்ந்த ராஜேஷ் முதலிடம் பிடித்தார். 13-14 வயதுக்கு உட்பட்ட மாணவர்கள் பிரிவில் எம்.பி.எம்.எஸ்., பள்ளியின் மாணவன் நிர்மல்குமார் முதலாவதாக வந்தார். 15-16 வயதுக்கு உட்பட்ட மாணவர்கள் பிரிவில் கன்டோன்மெண்ட் பள்ளியைச் சேர்ந்த மாணவர் டி.ஷான் முதலிடம் பிடித்தார். இந்த 3 பிரிவுகளில் முறையே டி.சிந்து, கே.பியோலா, ஆர். சரோஜினி ஆகிய புனித அன்னம்மாள் பள்ளி யைச் சேர்ந்த மாணவிகளே முதலிடம் பிடித்தனர். 

Newsletter