மேற்கு குறுமைய ஹாக்கி போட்டி: சாம்பியன் பட்டம் வென்ற ஈஷா வித்யா மாணவிகள்

கோவை: கோவை மேற்கு குறுமைய ஹாக்கி போட்டியில் ஈஷா வித்யா பள்ளி மாணவிகள் சாம்பியன் பட்டம் வென்றனர்.

கோவை: கோவை மேற்கு குறுமைய ஹாக்கி போட்டியில் ஈஷா வித்யா பள்ளி மாணவிகள் சாம்பியன் பட்டம் வென்றனர்.



கோவை மாவட்ட மேற்கு குறுமைய விளையாட்டு போட்டிகள் பாரதியார் பல்கலைக்கழகத்தில் கடந்த 6-ம் தேதி தொடங்கியது. இந்த போட்டிகளை ஈஷா வித்யா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி நடத்தியது. முதல் 3 நாட்கள் மாணவர்களுக்கான போட்டிகளும் அடுத்த 2 நாட்கள் மாணவிகளுக்கான போட்டிகள் நடைபெற்றன.

இறுதி நாளான இன்று (ஆக.10) மாணவிகளுக்கான ஹாக்கி, கபடி, வாலிபால், கூடைப்பந்தாட்டம் போன்ற பல்வேறு போட்டிகள் நடைபெற்றன.

14 வயதுக்குட்பட்ட மாணவிகளுக்கான ஹாக்கி போட்டியில் ஈஷா வித்யா பள்ளி எஸ்.பி.ஓ.ஏ பள்ளியை 2-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி வெற்றி பெற்றது. ஏற்கனவே, 14 வயதுக்குட்பட்ட மாணவர்களுக்கான ஹாக்கி போட்டியில் ஈஷா வித்யா மாணவர்கள் சாம்பியன் பட்டம் வென்றது குறிப்பிடத்தக்கது.



17 மற்றும் 19 வயதுக்குட்பட்ட மாணவிகளுக்கான ஹாக்கி போட்டிகளில் எஸ்.பி.ஓ.ஏ பள்ளி ஈஷா வித்யா பள்ளியை முறையே 1 – 0, 3 – 0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி வெற்றி பெற்றது.

இதேபோல், 17 வயதுக்குட்பட்ட கூடைப் பந்தாட்ட போட்டியில் அவிலா கான்வெண்ட் பள்ளி எஸ்.பி.ஓ.ஏ பள்ளியை 11-2 என்ற புள்ளி கணக்கில் வீழ்த்தி வெற்றி பெற்றது. 19 வயதுக்குட்பட்ட கூடைப் பந்தாட்ட போட்டியில் ஸ்ரீ ராகவேந்திரா பள்ளி அவிலா கான்வெண்ட் பள்ளியை 11-4 என்ற புள்ளி கணக்கில் வீழ்த்தி வெற்றி பெற்றது.

17 வயதுக்குட்பட்ட வாலிபால் போட்டியில் தேவராயபுரம் பள்ளி எஸ்.பி.ஓ.ஏ பள்ளியை 25 – 21, 25 - 18 என்ற புள்ளி கணக்கில் வீழ்த்தி வெற்றி பெற்றது.

Newsletter