துப்பாக்கி சுடுதலில் மிளிரும் கோயம்புத்தூர் ரைஃபில் கிளப் உறுப்பினர்கள்

கோவை: தமிழ்நாடு ஷாட்கன் சாம்பியன்சிப் நடத்திய 44-வது போட்டியில் கோயம்புத்தூர் ரைஃபில் கிளப் உறுப்பினர்கள் தங்க பதக்கங்களை வென்றுள்ளனர்.

கோவை: தமிழ்நாடு ஷாட்கன் சாம்பியன்சிப் நடத்திய 44-வது போட்டியில் கோயம்புத்தூர் ரைஃபில் கிளப் உறுப்பினர்கள் தங்க பதக்கங்களை வென்றுள்ளனர்.

 

44-வது தமிழ்நாடு ஷாட்கன் சாம்பியன்சிப் போட்டிகள் புதுக்கோட்டையில் சமீபத்தில் நடைபெற்றது. இதில் தமிழகம் முழுவதும் இருந்து நூறு துப்பாக்கி சுடும் வீரர்கள் கலந்துகொண்டனர். டிராப், டபுள் டிராப், மிக்ஸ் டிராப் மற்றும் ஸ்கிட், ஸ்கிட் போன்ற நான்கு பிரிவுகளின் கீழ் போட்டிகள் நடைபெற்றன. 

இதில், கோயம்புத்தூர் ரைஃபில் கிளப் உறுப்பினர்கள் 18 தங்கப் பதக்கங்கள் உட்பட 52 பதக்கங்களை வென்றனர். இதில், அபர்ணா வசந்த்குமார், செந்தில்குமார், பக்தவச்சலம் விக்ரம், ரமேஷ்குமார், கார்த்திக் மாதவன், யஸ்வந்த், அத்வைத், அனலினா, நிவேதா, கீர்த்தனா, ஸ்ரீநிதி மாளவிகா சுகன்யா மற்றும் சவுமியா ஆகியோர் வெற்றி பெற்றவர்களாவர்.

இந்த துப்பாக்கி சுடுதல் போட்டியில் சிறுவர், சிறுமியர் பங்கேற்பது இதுவே முதன்முறையாகும். கடந்த நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு கோயம்புத்தூர் ரைஃபில் கிளப் நாமசி அன்ட் கண்ணன் டிராபியை வென்றுள்ளனர்.

 

இது குறித்து கோயம்புத்தூர் ரைஃபில் கிளப் உறுப்பினர் அபர்ணா வசந்தகுமார் கூறுகையில், "சென்னை மட்டும் புதுக்கோட்டையில் மட்டுமே ஷாட் கன் போட்டிக்கான பயிற்சி பெறும் தளம் உள்ளது. இதனால் கோவை வீரர்களுக்கு இந்த போட்டி சிரமமாகவே இருந்தது." என்றார்.

Newsletter