அடுத்த ஆண்டு முதல் பள்ளிகளில் உடற்கல்விக்கென தனிப்பாடம்: மத்திய அமைச்சர் ரத்தோர்

2019-ம் ஆண்டு பள்ளிப் பாடத்தில் உடற்கல்விகென தனிப்பாடம் கொண்டுவரப்படும் என மத்திய விளையாட்டுத் துறை அமைச்சர் ராஜ்யவர்தன் சிங் ரத்தோர் அறிவித்துள்ளார்.

2019-ம் ஆண்டு பள்ளிப் பாடத்தில் உடற்கல்விகென தனிப்பாடம் கொண்டுவரப்படும் என மத்திய விளையாட்டுத் துறை அமைச்சர் ராஜ்யவர்தன் சிங் ரத்தோர் அறிவித்துள்ளார். 

இந்தியாவில் அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் ரக்பி உலக்கோப்பை தொடர் அறிமுக நிகழ்ச்சியில் மத்திய விளையாட்டுத் துறை அமைச்சர் ராஜ்யவர்தன் சிங் ரத்தோர், சர்வதேச ரக்பி போட்டி குழும நிர்வாக இயக்குநர் பிரெட் கோஸ்பர், ஆசிய ரக்பி போட்டி குழுமத் தலைவர் ஹுசேன், நடிகர் ராகுல் போஸ் மற்றும் இந்திய ரக்பி குழுமத் தலைவர் நுமாஷர் மேக்தா ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில், வெப் எல்லிஸ் கோப்பை அறிமுகப்படுத்தப்பட்டது.

இதைத் தொடர்ந்து மத்திய விளையாட்டுத் துறை அமைச்சர் ராஜ்யவர்தன் சிங் ரத்தோர் பேசியதாவது :- விளையாட்டு கல்வியின் ஒரு பகுதி அல்ல. அதுவும் ஒரு கல்வி. 2019-ம் ஆண்டு உடற்கல்வி தொடர்பான பாடத்திற்காக, பிற பாடத்திட்டங்களை 50 சதவீதம் குறைக்கவும், நாள்தோறும் இப்பாடத்தைப் பள்ளிகளில் அமல்படுத்தவும் கல்வித்துறை அமைச்சகம் உறுதியளித்துள்ளது.

விளையாட்டை மேம்படுத்துவதற்காக மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்ள இருக்கிறது. இனி வரும் காலங்களில் விளையாட்டுத்துறைக்கென அதிகளவு நிதியை ஒதுக்குவதாக உறுதியளித்துள்ளோம். 

நடப்பாண்டில் சிறந்த 20 விளையாட்டுப் பள்ளிகளுக்கு மத்திய அரசு ரூ. 7 முதல் ரூ. 10 கோடி ஒதுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்மூலம், தேர்வு செய்யப்பட்ட ஒவ்வொரு பள்ளிகளிலும் இரண்டு அல்லது 3 முக்கிய விளையாட்டுகளை மட்டும் ஊக்குவிக்க உள்ளோம், என்றார்.

Newsletter