இந்திய தேசிய ரேலி சாம்பியன்ஷிப் 2-ம் சுற்றுப் போட்டிகள் : கவுரவ்கில், அமித் ரஜித் கோஷ் இடையே கடும் போட்டி

கோவை : எம்.ஆர்.எப்., சார்பில் நடைபெற்று வரும் இந்திய தேசிய ரேலி சாம்பியன்ஷிப் போட்டியில், முன்னணி வீரர்கள் கவுரவ் கில், அமித் ரஜித் கோஷ் இடையே கடும் போட்டி நிலவி வருகிறது.

கோவை : à®Žà®®à¯.ஆர்.எப்., சார்பில் நடைபெற்று வரும் இந்திய தேசிய ரேலி சாம்பியன்ஷிப் போட்டியில், முன்னணி வீரர்கள் கவுரவ் கில், அமித் ரஜித் கோஷ் இடையே கடும் போட்டி நிலவி வருகிறது. 

எம்.ஆர்.எப்., சார்பில் நடத்தப்படும் இந்தியன் ரேலி சாம்பியன்ஷிப் போட்டிகள் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. இதில், மகேந்திர அட்வென்ஞ்சர்ஸ் குழுவைச் சேர்ந்த இந்தியாவின் முன்னணி வீரர்களான கவுரவ் கில் மற்றும் அமித் ரஜித் கோஷ் ஆகியோர் சிறப்பாக செயல்பட்டு வருகின்றனர். கடந்த மாதம் பின்லாந்தில் நடைபெற்ற போட்டியில் 12-வது இடத்தைப் பிடித்த கவுரவ் கில், சக ஒட்டுநரான முஷா செரீப் உடன் பத்து நிலைகளில் ஒன்பது நிலைகளை ஆர்.சி., 2 கார் பந்தயத்தில் பிடித்தார். இதேபோல, அமித் ரஜித் கோஷ் சக ஒட்டுநரான அஸ்வின் நாயக்குடன் சேர்ந்து கிரீஸில் நடைபெற்ற யூரோப்பியன் ரேலி சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் கடைசி 3 நிலைகளில் முன்னேறி ஈ.ஆர்.சி., 3 கார் பந்தயத்தில் இரண்டாம் இடத்தைப் பிடித்தார். 

இந்த நிலையில், எம்.ஆர்.எப்., சார்பில் கோவையில் நடைபெற்று வரும் இந்திய தேசிய ரேலி சாம்பியன்ஷிப் 2-ம் சுற்றுப் போட்டியில் முன்னணி வீரர்கள் கவுரவ் கில், அமித் ரஜித் கோஷ் இடையே கடும் போட்டி நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த எம்.ஆர்.எப். போட்டியில் மொத்த தூரமான 186 கிலோ மீட்டரில் 104 கிலோ மீட்டர் சிறப்பு நிலைகளில் ஒட்டப்பட இருக்கிறது. எனவே, இந்தப் போட்டி கோவை கார் பந்தய ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. 

இந்த இரண்டாம் சுற்று போட்டிகளில் எப்.எம்.எஸ்.சி.ஐ.,யின் தலைவர் அக்பர் இப்ராகிம் சிறப்பு ஒட்டுநராக 20 ஆண்டுகளுக்குப் பிறகு கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது. 

Newsletter