விமான நிலைய நிர்வாகத்தின் டேபிள் டென்னீஸ் போட்டிகள்: சத்யன், திவ்யா தங்கப்பதக்கம்

கோவை: விமான நிலைய நிர்வாகம் நடத்திய டேபிள் டென்னீஸ் விளையாட்டு போட்டிகளில் சத்யன் மற்றும் திவ்யா ஆகியோர் தங்கப்பதக்கம் வென்றனர்.

கோவை: விமான நிலைய நிர்வாகம் நடத்திய டேபிள் டென்னீஸ் விளையாட்டு போட்டிகளில் சத்யன் மற்றும் திவ்யா ஆகியோர் தங்கப்பதக்கம் வென்றனர்.

இந்திய விமான நிலைய நிர்வாகம் நடத்தும் டேபிள் டென்னீஸ் விளையாட்டு போட்டிகள் கோவையில் கடந்த 1-ம் தேதி தொடங்கியது.

பாரதியார் பல்கலைக்கழக வளாகத்தில் தொடக்கிய இந்த 48-வது டேபிள் டென்னீஸ் போட்டியில், ஆண்கள் பிரிவில் 20 அணிகள், பெண்கள் பிரிவில் 14 அணிகள், இளைஞர்கள் பிரிவில் 5 அணிகள், இளம் பெண்கள் பிரிவில் 4 அணிகள் இடம் பெற்றன.

இதில் வெற்றி பெற்ற மகளிர் மற்றும் ஆடவர் அணிகள், வரும் ஜனவரி மாதம் தேசிய அளவில் நடைபெறும் போட்டிக்கு தகுதி பெறுகின்றனர். இளம் வயதினருக்கான போட்டிகளில் வெற்றி பெறுபவர்கள் வரும் டிசம்பர் மாதம் நடைபெறும் தேசிய அளவிலான போட்டிகளுக்கு தகுதி பெறுகின்றனர்.

இந்த நிலையல், நேற்று முன்தினம் (7-ம் தேதி) நடைபெற்ற ஆடவர் இறுதி போட்டியில், பெட்ரோலியம் அணியைச் சேர்ந்த சத்யன் வெற்றி பெற்று தங்கப்பதக்கம் பெற்றார்.



இதேபோல், மகளிர் இறுதிப் போட்டியில் அதே அணியைச் சேர்ந்த திவ்யா வெற்றி பெற்று தங்கப்பதக்கத்தினை பெற்றார்.



Newsletter