ஈஷா பள்ளியில் கோவை மேற்கு மண்டல பள்ளிகளுக்கு இடையேயான 2-ம் நாள் விளையாட்டு போட்டிகள்

கோவை: கோவை மேற்கு மண்டல பள்ளிகளுக்கு இடையேயான விளையாட்டு போட்டிகளை கோவை ஈஷா வித்யா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி இந்தாண்டு நடத்துகிறது.

கோவை: கோவை மேற்கு மண்டல பள்ளிகளுக்கு இடையேயான விளையாட்டு போட்டிகளை கோவை ஈஷா வித்யா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி இந்தாண்டு நடத்துகிறது.

இதில், 53 பள்ளிகளைச் சேர்ந்த 2,000-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொள்கின்றனர். கால்பந்தாட்டம், வாலிபால் போன்ற விளையாட்டு போட்டிகள் நேற்று முதல் (ஆக.6) முதல் ஆக.,10 வரையும், தடகள போட்டிகள் ஆக.20., 21 ஆகிய தேதிகளிலும் நடைபெறுகின்றன.



போட்டியின் இரண்டாம் நாளான இன்று (ஜூலை 7) கபடி, கைப்பந்தாட்டம், கால்பந்தாட்டம், வாலிபால் போன்ற போட்டிகள் நடைபெற்றன. 14 வயதுக்குட்பட்ட மாணவர்களுக்கான கபடி போட்டியில் 17 பள்ளிகள் பங்கேற்றன.

அதன் இறுதி ஆட்டத்தில் கோவில்மேடு மாநகராட்சி மேல்நிலைப் பள்ளி 44 – 42 என்ற புள்ளி கணக்கில், வெங்கடாபுரம் மேல்நிலைப் பள்ளியை வீழ்த்தி வெற்றிபெற்றது.

6 பள்ளிகள் பங்கேற்ற கைப்பந்து போட்டியில் பிரிமியர் வித்யா விகாஸ் பள்ளி 5 – 3 என்ற புள்ளி கணக்கில் ஜெயசி மெட்ரிக் பள்ளியை வீழ்த்தி வெற்றி பெற்றது.

19 வயதுக்குட்பட்ட மாணவர்களுக்கான கால்பந்தாட்ட போட்டியில் 14 பள்ளிகள் பங்கேற்றன. இதில் ராகவேந்திரா பள்ளி, எஸ்.பி.ஓ.ஏ பள்ளி ஆகியவை அரையிறுதிக்கு முன்னேறின.

19 வயதுக்குட்பட்ட மாணவர்களுக்கான வாலிபால் போட்டியில் மத்வராயபுரம் சவரா மெட்ரிக் பள்ளியும், ஆலாந்துரை உயர்நிலைப்பள்ளியும் அரையிறுதிக்கு முன்னேறின.

நேற்று நடைபெற்ற ஹாக்கி போட்டியின் இறுதிச் சுற்றில் ஈஷா வித்யா பள்ளி எஸ்.பி.ஓ.ஏ பள்ளியை 1-0 என்ற புள்ளி கணக்கில் வீழ்த்தி வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.

Newsletter