மண்டல அளவிலான விளையாட்டுப் போட்டிகள் : 2,000 மாணவர்கள் பங்கேற்பு

கோவை: ஈஷா வித்யா பள்ளி நடத்தும் மண்டல அளவிலான விளையாட்டு போட்டிகளில் 53 பள்ளிகளைச் சேர்ந்த 2,000 மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

கோவை: ஈஷா வித்யா பள்ளி நடத்தும் மண்டல அளவிலான விளையாட்டு போட்டிகளில் 53 பள்ளிகளைச் சேர்ந்த 2,000 மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

கோவை மேற்கு மண்டல பள்ளிகளுக்கு இடையேயான விளையாட்டு போட்டிகளை கோவை ஈஷா வித்யா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி இந்தாண்டு நடத்துகிறது. இதில், 53 பள்ளிகளைச் சேர்ந்த 2,000-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொள்கின்றனர். கால்பந்தாட்டம், வாலிபால், ஆக்கி, கபடி, கோ – கோ, கூடை பந்தாட்டம், எறிப்பந்து, கைப்பந்தாட்டம் போன்ற விளையாட்டு போட்டிகள் இன்று முதல் ஆக. 10-ம் தேதி வரை நடைபெற உள்ளது. 

இன்று முதல் 3 நாட்கள் மாணவர்களுக்கும், அடுத்த 2 நாட்கள் மாணவிகளுக்கும் விளையாட்டு போட்டிகள் நடக்கவுள்ளன. இன்று நடைபெற்ற போட்டிகளில் அனைத்து மாணவர்களும் உற்சாகமாகப் பங்கேற்றனர். ஆக்கி போட்டியில் 14 வயதுக்குட்பட்டோருக்கான பிரிவில் ஈஷா வித்யா பள்ளி 1:0 என்ற கணக்கில் எஸ்.பி.ஓ.ஏ., பள்ளியை வீழ்த்தியது. 

Newsletter