சி.டி.சி.ஏ., கிரிக்கெட் போட்டியில் காஸ்மோ அணி எளிதில் வெற்றி

கோவை: கோவை டிவிசன் கிரிக்கெட் போட்டியில் டெவில் ஸ்டோரக்கர்ஸ் கிரிக்கெட் கிளப் அணியை காஸ்மோ வில்லேஜ் அணி எளிதில் தோற்கடித்தது.

கோவை: கோவை டிவிசன் கிரிக்கெட் போட்டியில் டெவில் ஸ்டோரக்கர்ஸ் கிரிக்கெட் கிளப் அணியை காஸ்மோ வில்லேஜ் அணி எளிதில் தோற்கடித்தது. 

கோவை மாவட்ட கிரிக்கெட் வாரியத்தின் சார்பில் நடத்தப்பட்ட டிவிசன் அளவிலான கிரிக்கெட் போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது. இதன் 4-வது டிவிசன் போட்டியில் காஸ்மோ வில்லேஜ் அணி, டெவில் ஸ்டோரக்கர்ஸ் கிரிக்கெட் கிளப் அணியை எதிர்கொண்டது. இதில், முதலில் பேட் செய்த டெவில் ஸ்டோரக்கர்ஸ் கிரிக்கெட் கிளப் அணி 43.5 ஓவர்களில் 135 ரன்களில் ஆல் அவுட் ஆனது. காஸ்மோ அணியின் சார்பில் கே. மணிகண்டன் 3 விக்கெட்டைக் கைப்பற்றினார். இதைத் தொடர்ந்து, களமிறங்கிய காஸ்மோ அணிக்கு வி. பிரவீன்குமாரின் (51) அபார ஆட்டத்தால் 27.4 ஓவர்களில் இலக்கை எளிதில் பிடித்து, வெற்றி பெற்றது. 

இதேபோல, 3-வது டிவிசன் போட்டியில் முதலில் பேட் செய்த பி.எஸ்.ஜி., டெக் கிரிக்கெட் கிளப் அணி 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 197 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக, ஆர். அக்ஷய் ராஜ் (38), வி. கார்த்திக் (42) குவித்தனர். சீஹாக்ஸ் அணியின் சார்பில் எம்.அருண்குமார் 4(26) விக்கெட்டுக்களைக் கைப்பற்றினார். இதைத் தொடர்ந்து, களமிறங்கிய சீஹாக்ஸ் அணி சபரி சதிஷின் அரைசதத்தால் (75) 45 ஓவர்களில் 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 

Newsletter