மாவட்ட அளவிலான கிரிக்கெட் போட்டி : சூர்யபிராசத்தின் அசத்தல் பந்துவீச்சால் திருச்சியை எளிதில் தோற்கடித்தது கோவை

கோவை: மாவட்ட அளவிலான கிரிக்கெட் போட்டியில் சூர்யபிராசத்தின் சிறப்பான பந்துவீச்சால் இன்னிங்ஸ் மற்றும் 105 ரன்கள் வித்தியாசத்தில் கோவை அணி வெற்றி பெற்றது.

கோவை: மாவட்ட அளவிலான கிரிக்கெட் போட்டியில் சூர்யபிராசத்தின் சிறப்பான பந்துவீச்சால் இன்னிங்ஸ் மற்றும் 105 ரன்கள் வித்தியாசத்தில் கோவை அணி வெற்றி பெற்றது. 

தமிழ்நாடு கிரிக்கெட் வாரியம் சார்பில் மாவட்ட அளவில் 14 வயதுக்குட்பட்டோருக்கான கிரிக்கெட் போட்டிகள் பி.எஸ்.ஜி. மருத்துவக் கல்லூரி மைதானத்தில் நேற்றும், இன்றும் நடைபெற்றது. இதன் ஒரு போட்டியில் கோவை, திருச்சி கிரிக்கெட் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. முதலில் பேட் செய்த திருச்சி அணி, கோவை பந்துவீச்சாளர்களை சமாளிக்க முடியாமல் முதல் இன்னிங்சில் 51 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. கோவை அணியின் சார்பில் டி சூர்யபிரசாத் 12 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளையும், ஜி. பிரனாவ் 6 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். 

இதைத்தொடர்ந்து, தனது முதல் இன்னிங்சை தொடங்கி கோவை அணி, கே சிபியெந்தா (96), ஏ. மனீத் தக்ஷினி (55) ஆகியோரின் சிறப்பான ஆட்டத்தால் 214 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. பின்னர், 163 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2-வது இன்னிங்சை தொடங்கிய திருச்சி அணி, 40 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டிற்கு 58 ரன்கள் மட்டுமே சேர்த்திருந்தது. இதனால், கோவை அணி இன்னிங்ஸ் மற்றும் 105 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம், இத்தொடரின் காலிறுதிக்கும் தகுதி பெற்றது. 

Newsletter