உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் வெள்ளி வென்றார் சிந்து

உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் தொடரில் ஸ்பெயின் வீராங்கனை கரோலினா மரினிடம் தோல்வியடைந்த இந்திய வீராங்கனை பி.வி., சிந்து வெள்ளிப் பதக்கம் வென்றார்.

உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் தொடரில் ஸ்பெயின் வீராங்கனை கரோலினா மரினிடம் தோல்வியடைந்த இந்திய வீராங்கனை பி.வி., சிந்து வெள்ளிப் பதக்கம் வென்றார். 

சீனாவில் உள்ள நான்ஜிங் நகரில் உலக பாட்மின்டன் சாம்பியன்ஷிப் தொடர் நடந்தது. இதன் பெண்கள் ஒற்றையர் பிரிவு இறுதிப் போட்டியில் உலகின் 'நம்பர்-3' வீராங்கனையும், இந்தியாவைச் சேர்ந்தவருமான பி.வி., சிந்து, 8-வது இடத்தில் உள்ள ஸ்பெயினின் கரோலினா மரினை எதிர்கொண்டார். சம பலம் கொண்ட இருவரும் ஆக்ரோசமாக விளையாடினர். இறுயிதில் முதல் செட்டை 19-21 என போராடி இழந்தார் சிந்து. இதைத் தொடர்ந்து, அவர் 2-வது செட்டில் மீண்டெழுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், 10-21 என 2-வது செட்டையும் கோட்டைவிட்டார். 



இறுதியில், பி.வி., சிந்து 19-21, 10-21 என்ற நேர்செட் கணக்கில் தோல்வியடைந்து மீண்டும் வெள்ளிப் பதக்கத்தை கைப்பற்றினார். ஏற்கனவே, கடந்த ஆண்டு நடந்த இத்தொடரில் வெள்ளிப் பதக்கம் வென்றிருந்தார். தவிர இது, உலக பாட்மிண்டனில் சிந்து வென்ற 4-வது பதக்கம் (2013, 2014, 2017) இதுவாகும். 

Newsletter