கோவையில் பாரத் பார்முலா கார்டிங் சாம்பியன்ஷிப் போட்டிகள்

கோவை: கோவை கேட் டெக்னாலஜிஸ் சார்பில் பாரத் பார்முலா கார்டிங் சாம்பியன்ஷிப் போட்டிகள் கோயம்புத்தூர் கரிமோட்டார் ஸ்பீட் வேயில் ஆக்ஸ்ட் 2-ம் தேதி தொடங்கி 4-ம் தேதி வரை நடைபெற்றது.


கோவை: கோவை கேட் டெக்னாலஜிஸ் சார்பில் பாரத் பார்முலா கார்டிங் சாம்பியன்ஷிப் போட்டிகள் கோயம்புத்தூர் கரிமோட்டார் ஸ்பீட் வேயில் ஆக்ஸ்ட் 2-ம் தேதி தொடங்கி 4-ம் தேதி வரை நடைபெற்றது. 



வாகன வடிவமைப்புத் துறையில் பயிலும் பொறியியல் மாணவர்களின் திறனை மேம்படுத்துவதற்காகவும், அவர்களுக்கு நல்ல வேலைவாய்ப்பைப் பெற்றுத் தருவதற்காகவும் இந்த நிகழ்வு நடத்தப்பட்டது.

சாம்பியன்ஷிப் போட்டிகளையொட்டி, கார்ட் வாகனங்கள் தயாரிப்பது எப்படி? என்பது குறித்து மாணவ-மாணவியருக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. மேலும், ஏற்கெனவே கார்ட் தயாரிப்பில் உள்ள மாணவர்களின் திறனை மேம்படுத்தும் பயிற்சியும் அளிக்கப்படுகிறது.



இந்நிகழ்வு மூலமாக பொறியியல் மாணவர்கள் தங்களின் வாகனத் தயாரிப்பு திறன்களை மற்றவர்களுக்கு காட்சிப்படுத்த இதுவொரு நல்ல வாய்ப்பாக்க அமைந்தது. கார்ட் தயாரிப்புக்கு தேவையான அனைத்து உதவிகளும் இங்கு வழங்கப்பட்டது.

இந்த நிகழ்வையொட்டி, கேட் நிறுவனம் தனிநபர்களுக்கும், குழுக்களுக்கும் பல்வேறு பரிசுகளை வழங்குகின்றன. இருவிதமான போட்டிகள் நடைபெற்றன. ஒன்று விருச்சுவல் சுற்று மற்றொன்று சாம்பியன் சுற்று. இந்தப் போட்டிகளில் வெற்றிபெற்றவருக்கு ரூ.15 லட்சம் மதிப்பிலான பரிசுகள் வழங்கப்பட்டன.



இதில் ரூ.7.5 லட்சம் பரிசுத் தொகையாக அளிக்கப்படுகிறது. முதல் பரிசாக ரூ.2.5 லட்சமும், இரண்டாம் பரிசாக ரூ.1.5 லட்சமும் மூன்றாம் பரிசாக ரூ.1 லட்சமும் வழங்கப்பட்டன. சிறந்த கார்ட் ஓட்டுநருக்கு ரூ.50 ஆயிரம் பரிசாக வழங்கப்பட்டது.



தமிழகம், கேரளா, ஆந்திரா, மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் இருந்து மொத்தம் 63 குழுக்கள் இந்தப் போட்டிகளில் பங்கேற்றன. போட்டிகளில் பங்கேற்றோருக்கு சர்வதேச சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. மேலும், இவர்களுக்கு ரூ.2 ஆயிரம் மதிப்பிலான பரிசும் வழங்கப்பட்டது. போட்டியில் பங்கேற்ற 350 இறுதியாண்டு பொறியியல் கல்லூரி மாணவர்களுக்கு வேலைவாய்ப்பு பெறுவதில் உதவியும் வழங்கப்படுகிறது.

Newsletter