ஸ்வர்கா பவுண்டேசன் சார்பில் நரம்பு மண்டலம் பாதிக்கப்பட்டோருக்கு துப்பாக்கிச் சூடும் பயிற்சி

கோவை: ஸ்வர்கா பவுண்டேசன் சார்பில் நரம்பு மண்டலம் பாதிக்கப்பட்டோருக்கான துப்பாக்கிச்சூடும் பயிற்சி நேரு கல்வி குழுமத்தில் நடைபெற்றது.

கோவை: ஸ்வர்கா பவுண்டேசன் சார்பில் நரம்பு மண்டலம் பாதிக்கப்பட்டோருக்கான துப்பாக்கிச்சூடும் பயிற்சி நேரு கல்வி குழுமத்தில் நடைபெற்றது. 

நரம்பு மண்டல குறைபாடுகளால் பாதிக்கப்பட்ட மாற்றுத் திறனாளிகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை ஸ்வர்கா அறக்கட்டளை செய்து வருகிறது. இந்த அறக்கட்டளை நரம்பு சம்பந்தமான நோய்களால் பாதிக்கப்பட்டோர் தங்களின் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பத் தேவையான அனைத்து உதவிகளையும் செய்து வருகிறது.  



இந்த நிலையில், நேரு விமானவியல் கல்லூரி வளாகத்தில் நரம்பு மண்டலம் பாதிக்கப்பட்டோருக்கு துப்பாக்கிச் சூடும் பயிற்சி இன்று முதல் தொடங்கப்பட்டது. தொடக்கவிழாவில் ஸ்வர்கா அறக்கட்டளை நிறுவனர்கள் ஸ்வர்ணலதா, குருபிரசாத் ஆகியோர் பங்கேற்றனர்.



இது குறித்து நேரு கல்வி குழுமங்களின் தலைமை நிர்வாக அதிகாரியும் செயலாளருமான மருத்துவர் பி.கிருஷ்ணகுமார் கூறியதாவது :- இந்தப் பயிற்சி நோய்களால் பாதிக்கப்பட்டோருக்கு தன்னம்பிக்கையையும், உடல் வலிமையையும் தரும் என்று நம்புகிறோம். மேலும், இந்தப் பயிற்சி அவர்களின் நினைவாற்றலையும், ஞாபகத் திறனையும் அதிகரிக்கிறது. நேரு விமானவியல் கல்லூரி வளாகத்தில் நேரு ஏர் சைப்பிள் அகாடமி செயல்படுகிறது. 



இந்த அகாடமியை ஐ.பி.எஸ்., அதிகாரி சைலேந்திர பாபு கடந்த ஜனவரி மாதம் தொடங்கி வைத்தார். 15 ஆயிரம் பரப்பளவில் அமைந்துள்ள இந்த அகடாமியில் ஒரேசமயம் பத்து பேர் பயிற்சி பெறும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும், தானியங்கியுடன் பொருத்தப்பட்ட அனைத்து வசதிகளும் அங்குள்ளது. இந்த துப்பாக்கிச் சூடும் களத்தை மாற்றுத் திறனாளிகளும் பயன்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது, என்றார். 

Newsletter