அகில இந்திய டேபிள் டென்னிஸ் போட்டி : பி.எஸ்.பி.பி., அணி சாம்பியன்

கோவை: 48-வது அகில இந்திய இன்டர் இன்ஸ்டிடியூசனல் டேபிள் டென்னிஸ் போட்டியில் பெட்ரோலியம் விளையாட்டு மேம்பாட்டு வாரிய அணி சாம்பியன் பட்டத்தை வென்றது.

கோவை: 48-வது அகில இந்திய இன்டர் இன்ஸ்டிடியூசனல் டேபிள் டென்னிஸ் போட்டியில் பெட்ரோலியம் விளையாட்டு மேம்பாட்டு வாரிய அணி சாம்பியன் பட்டத்தை வென்றது. 

கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் ஆண்கள் மற்றும் பெண்கள் பிரிவுகளின் அடிப்படையில் போட்டிகள் நடத்தப்பட்டது. இதில், ஆண்கள் பிரிவில் பெட்ரோலியம் விளையாட்டு மேம்பாட்டு வாரிய அணி, ரயில்வே விளையாட்டு மேம்பாட்டு வாரிய அணியை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்றது. யூத் பாய்ஸ் அணி, விமானநிலைய அதிகாரச்சபை அணியை தோற்கடித்து தங்கப்பதக்கத்தைக் கைப்பற்றியது. 

முன்னதாக, பெட்ரோலியம் விளையாட்டு மேம்பாட்டு வாரிய பெண்கள் அணி, விமானநிலைய அதிகாரச்சபை அணியை வீழ்த்தி மீண்டும் சாம்பியனானது. ஒட்டுமொத்தமாக, 4 தங்கங்களைக் கைப்பற்றிய பெட்ரோலியம் விளையாட்டு மேம்பாட்டு வாரிய அணி அகில இந்திய இன்டர் இன்ஸ்டிடியூசனல் டேபிள் டென்னிஸ் போட்டியின் சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றது. 3 வெள்ளி, ஒரு வெண்கலத்தை விமானநிலைய அதிகாரச்சபை அணி கைப்பற்றியது.

இன்று முதல் 7-ம் தேதி வரை நடைபெறும் தனிநபருக்கான போட்டிகள் பாரதியார் பல்கலைக்கழகத்தின் உள்விளையாட்டரங்கில் தொடங்கியது

Newsletter