கோவையில் வரும் 5-ம் தேதி நடக்கிறது மாபெரும் மாரத்தான் போட்டி

கோவை : பொருளாதாரத்தின் பின்தங்கிய மாணவர்களின் கல்வி மற்றும் விளையாட்டிற்கு நிதி திரட்டும் வகையில் கோவையில் வரும் 05-ம் தேதி மாரத்தான் போட்டி நடைபெற இருக்கிறது.

கோவை : பொருளாதாரத்தின் பின்தங்கிய மாணவர்களின் கல்வி மற்றும் விளையாட்டிற்கு நிதி திரட்டும் வகையில் கோவையில் வரும் 05-ம் தேதி மாரத்தான் போட்டி நடைபெற இருக்கிறது. 

கோவை தடகள கிளப் மற்றும் கோவை விளையாட்டு மற்றும் கல்வி அறக்கட்டளையும் இணைந்து இந்த மாரத்தான் போட்டியை நடத்துகிறது. வ.உ.சி., மைதானத்தில் நடக்கும் இந்தப் போட்டியை மாநகர காவல் ஆணையர் கே. பெரியய்யா கொடியசைத்துத் தொடங்கி வைக்க உள்ளார். யில் ஆண்கள், பெண்கள் என இருபாலாருக்கும் 10 கி.மீ., 05 கி.மீ., மற்றும் 03 கீ.மீ., என்ற பிரிவுகளில் நடத்தப்படுகிறது. வெற்றி பெறுபவர்களுக்கு ரூ. 70,000 வரையிலான பரிசுப் பொருட்கள் வழங்கப்படுகிறது. குறைந்தபட்சம் 2,000 போட்டியாளர்கள் இந்த மாரத்தானில் பங்கேற்பாளர்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. 

Newsletter