வரும் 4-ம் தேதி யு19 மற்றும் யு23 கோவை மாவட்ட கிரிக்கெட் அணிக்கான வீரர்கள் தேர்வு

கோவை : 19 மற்றும் 23 வயதுக்குட்பட்டோருக்கான கோவை மாவட்ட கிரிக்கெட் அணிக்கான வீரர்களின் தேர்வு வரும் 4-ம் தேதி நடக்கிறது.



கோவை : 19 மற்றும் 23 வயதுக்குட்பட்டோருக்கான கோவை மாவட்ட கிரிக்கெட் அணிக்கான வீரர்களின் தேர்வு வரும் 4-ம் தேதி நடக்கிறது. 

தமிழ்நாடு கிரிக்கெட் கிரிக்கெட் வாரியத்தின் சார்பில் மாவட்ட அளவிலான கிரிக்கெட் போட்டிகள் விரைவில் நடைபெற இருக்கிறது. இதற்காக, கோவை மாவட்ட கிரிக்கெட் அணியின் 19 மற்றும் 23 வயதுக்குட்பட்டோருக்கான அணி வீரர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். வரும் 4-ம் தேதி அவினாசி சாலையில் உள்ள ராமகிருஷ்ணா கிரிக்கெட் அறக்கட்டளை வலைபயிற்சி மற்றும் எஸ்.என்.ஆர். கல்லூரி மைதானத்தில் வீரர்களின் தேர்வு நடக்கிறது. 

இதன் துணை செயலாளர் சுரேஷ்குமார் கூறியதாவது;- வரும் சனிக்கிழமை ராமகிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரியில் உள்ள மைதானத்தில் கோவை மாவட்ட அணிக்கான வீரர்கள் தேர்வு நடைபெறும். இதில், 19 வயதிற்கு உட்பட்டோர் மற்றும் 23 வயதிற்கு உட்பட்ட வீரர்கள் இதில் பங்கேற்க அனுமதிக்கப்படுவார்கள். சிறப்பாக விளையாடும் வீரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். மேலும், பயிற்சி ஆட்டங்கள் நடத்தப்பட்டு, அதில் சிறப்பாக விளையாடும் 16 வீரர்கள் தேர்வு செய்யப்பட்டு, அவர்களுக்கு தனிப் பயிற்சிகள் அளிக்கப்படும். இவர்கள் கோவை மாவட்ட அணிக்காக விளையாடுவார்கள். இந்த வீரர்களை சீனியர் தேர்வு குழு தலைவர் குமரேசன், அவிநாஷ் கந்தவேல், ராஜாராம், கண்ணன் ஆகியோர் தேர்வு செய்வார்கள், இவ்வாறு கூறினார். 

19 வயதுக்குட்பட்டோருக்கான அணித் தேர்வில் பங்கேற்க இருப்பவர்கள் 4-ம் தேதி காலை 06.30 மணிக்கும், 23 வயதுக்குட்பட்டோருக்கான தேர்வில் பங்கேற்க இருக்கும் வீரர்கள் பிற்பகல் 03.30 மணிக்கு வருமாறு அறிவிக்கப்பட்டுள்ளது. 1999, செப்., 1-ம் தேதி அல்லது அதற்குப் பிறகு பிறந்தவர்கள் மற்றும் 1996 செப்.,1 அல்லது அதற்கு பிறகு பிறந்தவர்கள் மட்டுமே யு19 மற்றும் யு23 கோவை மாவட்ட கிரிக்கெட் அணிக்கான வீரர்கள் தேர்வில் பங்கேற்க முடியும்.

Newsletter