மாநில அளவிலான துப்பாக்கிச்சூடு போட்டிகளில் பதக்கங்களை குவித்த வீராங்கனைக்கு பாராட்டு

கோவை: மாநில அளவிலான துப்பாக்கிச்சூடு போட்டியில் பதக்கங்களை குவித்த வீராங்கனையை கோவை மாநகர காவல் ஆணையர் கே. பெரியய்யா பாராட்டினார்.

கோவை: மாநில அளவிலான துப்பாக்கிச்சூடு போட்டியில் பதக்கங்களை குவித்த வீராங்கனையை கோவை மாநகர காவல் ஆணையர் கே. பெரியய்யா பாராட்டினார். 

மதுரை துப்பாக்கிச்சூடு கிளப் சாபில் கடந்த 23-ம் தேதி முதல் 29-ம் தேதி வரையில் மாநில அளவிலான துப்பாக்கிச்சூடு போட்டி நடத்தப்பட்டது. இதில், கோவையைச் சேர்ந்த ஈஷா பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் பி.டெக்., 2-ம் ஆண்டு படித்து வரும் பூஜா கலந்து கொண்டார்.

போட்டிகளில் சிறப்பாக செயல்பட்ட அவர், ஜுனியர் பெண்கள் பிரிவில் 10 மீ., மற்றும் 25 மீ., துப்பாக்கிச்சூடு போட்டிகளில் தங்கம் வென்றார். இதேபோல, மற்ற பிரிவு போட்டிகளில் ஒரு வெள்ளி மற்றும் ஒரு வெண்கலம் வென்றார். 



இந்த நிலையில், மாநில அளவிலான துப்பாக்கிச்சூடு போட்டியில் பதக்கங்களை குவித்த வீராங்கனை பூஜாவிற்கு கோவை மாநகர காவல் ஆணையர் கே. பெரியய்யா பாராட்டு தெரிவித்தார். 

Newsletter