உதகையில் மாவட்ட அளவிலான இறகு பந்து போட்டிகள் தொடக்கம்

நீலகிரி: உதகையில் மாவட்ட அளவிலான இறகு பந்து போட்டிகள் அண்ணா உள் விளையாட்டு அரங்கில் இன்று தொடங்கியது.

நீலகிரி: உதகையில் மாவட்ட அளவிலான இறகு பந்து போட்டிகள் அண்ணா உள் விளையாட்டு அரங்கில் இன்று தொடங்கியது. 



10 வயதிற்குட்பட்டோர், 13, 15, 17, 19 என 55 வயது வரையில் 27 பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு போட்டிகள் நடத்தப்படுகின்றனர். இதில், மாவட்டத்தில் இருந்து சுமார் 432 பேர் பங்கேற்றுள்ளனர். இன்று தொடங்கிய இப்போட்டிகள் வரும் 31-ம் தேதி வரை நடைபெறவுள்ளது.



மேலும், மாவட்டத்தில் உள்ள இறகு பந்து சங்கங்களை சேர்ந்தவர்களும் இப்போட்டிகளில் பங்கேற்கவுள்ளனர். இப்போட்டிகள் அனைத்தும் நாக்-அவுட் சுற்று முறையில் நடைபெறுகிறது. இதில், வெற்றி பெறுபவர்களுக்கு பரிசு கோப்பை மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்படவுள்ளன.

Newsletter