காவல்துறையின் 58-வது விளையாட்டு போட்டிகளுக்கான தொடர் ஜோதி கோவை வந்தடைந்தது

கோவை: திருச்சியில் வரும் 27-ம் தேதி 58-வது காவல்துறை விளையாட்டுப் போட்டிகள் நடைபெறுவதையொட்டி தொடங்கிய தொடர் ஜோதி ஓட்டம் இன்று கோவைக்கு வந்தடைந்தது.

கோவை: திருச்சியில் வரும் 27-ம் தேதி 58-வது காவல்துறை விளையாட்டுப் போட்டிகள் நடைபெறுவதையொட்டி தொடங்கிய தொடர் ஜோதி ஓட்டம் இன்று கோவைக்கு வந்தடைந்தது.

வரும் 27-ம் தேதி திருச்சி அண்ணா விளையாட்டரங்கில் காவல்துறைக்கான 58-வது விளையாட்டுப் போட்டி நடைபெற உள்ளது. இந்த விளையாட்டு போட்டி தொடங்கும் விதமாக தொடர் ஜோதி ஓட்டம் நடைபெற்று வருகிறது. இந்த ஜோதி கடந்த 24-ம் தேதி சென்னை காவல்துறை தலைமை அலுவலகத்திலிருந்து புறப்பட்டு இன்று கோவை மேற்கு மண்டலம் வந்தடைந்தது.



இந்த ஜோதியை மேற்கு மண்டல காவல்துறை தலைவர் பாரி பெற்றுக் கொண்டார். பின்னர் காவல்துறை விளையாட்டு வீரர்கள் கலந்து கொண்ட தொடர் ஜோதி ஓட்டம் கோவை பந்தய சாலையில் உள்ள காவல்துறை மேற்கு மண்டல அலுவலகம் முன்பு நடைபெற்றது.

இதில் காவல்துறை மேற்கு மண்டல தலைவர் பாரி, கோவை மாநகர காவல்துறை ஆணையாளர் பெரியய்யா, கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மூர்த்தி போன்ற காவல்துறை அதிகாரிகள் கலந்து கொண்டு தொடர் ஜோதி ஓட்டத்தை தொடங்கி வைத்தனர்.



இந்த ஓட்டம் கோவை வ.உ.சி மைதானம் வரை சென்றது. பின்னர் இந்த ஜோதி இங்கிருந்து புறப்பட்டு மதுரை வழியாக வரும் 27-ம் தேதி திருச்சி சென்றடையவுள்ளது.

பின்னர் அங்கு அந்த ஜோதி ஏற்றப்பட்டு விளையாட்டுப் போட்டிகள் ஆரம்பமாகின்றன.

Newsletter