ஜி.ஆர்.ஜி கோப்பைக்கான கூடைப்பந்து போட்டி: கோப்பையை வென்றது சென்னை எம்.ஓ.பி வைஷ்ணவா கல்லூரி

கோவை: கோவை ஜி.ஆர்.ஜி அறக்கட்டளை நூற்றாண்டு விழா கொண்டாடத்தின் ஒரு பகுதியாக ஜி.ஆர்.ஜி கோப்பை கூடைப்பந்து போட்டிகள் கடந்த 18-ம் தேதி தொடங்கியது. இதில் தமிழகத்தின் தலை சிறந்த எட்டு மகளிர் கல்லூரி அணிகள் பங்கேற்றன.


கோவை: à®•ோவை ஜி.ஆர்.ஜி அறக்கட்டளை நூற்றாண்டு விழா கொண்டாடத்தின் ஒரு பகுதியாக ஜி.ஆர்.ஜி கோப்பை கூடைப்பந்து போட்டிகள் கடந்த 18-ம் தேதி தொடங்கியது. இதில் தமிழகத்தின் தலை சிறந்த எட்டு மகளிர் கல்லூரி அணிகள் பங்கேற்றன.

'ஏ' பிரிவில் சென்னை எம்.ஓ.பி வைஷ்ணவா கல்லூரி, எத்திராஜ் கல்லூரி, மதுரை லேடி டோக், கோவை பி.எஸ்.ஜி கிருஷ்ணம்மாள் கல்லூரியும், 'பி' பிரிவில் சென்னை ஹிந்துஸ்தான் பல்கலைக்கழக பெண்கள் அணி, பி.எஸ்.ஜி கலை அறிவியல் கல்லூரி, சென்னை மகளிர் கிறிஸ்துவ கல்லூரி மற்றும் நாமக்கல் பாவை பொறியியல் கல்லூரி அணிகள் பங்கேற்றன. 

இதில் பி.எஸ்.ஜி.ஆர். கிருஷ்ணம்மாள் பெண்கள் கல்லூரி, சென்னை ஹிந்துஸ்தான் பல்கலை, எம்.ஓ.பி வைஷ்ணவா கல்லூரி மற்றும் பி.எஸ்.ஜி கலை அறிவியல் கல்லூரிகள் அரை இறுதிக்கு தகுதி பெற்றன.



முதலாவது அரை இறுதி போட்டியில் பி.எஸ்.ஜி.ஆர் கிருஷ்ணம்மாள் பெண்கள் கல்லூரி அணியை எதிர்த்து பி.எஸ்.ஜி கலை அறிவியல் கல்லூரி அணி விளையாடியது. இதில் பி.எஸ்.ஜி கலை அறிவியல் கல்லூரி அணி 61-54 என்ற புள்ளி கணக்கில் வெற்றி பெற்று இறுதி போட்டிக்குள் நுழைந்தது.

மற்றொரு போட்டியில் சென்னை எம்.ஓ.பி வைஷ்ணவா கல்லூரி அணியை எதிர்த்து சென்னை ஹிந்துஸ்தான் கல்லூரி அணி விளையாடியது. இதில் எம்.ஓ.பி வைஷ்ணவா கல்லூரி அணி 57-45 என்ற புள்ளி கணக்கில் இறுதி போட்டிக்கு முன்னேறியது.

பரபரப்பான இறுதி போட்டியில் எம்.ஓ.பி வைஷ்ணவா கல்லூரி அணி 68-44 என்ற புள்ளி கணக்கில் வெற்றி பெற்று கோப்பையை தட்டிச் சென்றது.



மூன்றாவது நான்காவது இடத்திற்கான போட்டியில் பி.எஸ்.ஜி.ஆர் கிருஷ்ணம்மாள் பெண்கள் கல்லூரி அணியை எதிர்த்து ஹிந்துஸ்தான் பல்கலை அணி மோதியது. இதில் பி.எஸ்.ஜி.ஆர் கிருஷ்ணம்மாள் பெண்கள் கல்லூரி அணி 69-53 என்ற புள்ளி கணக்கில் வெற்றி பெற்று 3-ம் இடத்தையும் ஹிந்துஸ்தான் பல்கலை அணி நான்காம் இடத்தையும் பிடித்தது.

இறுதி போட்டியில் வெற்றி பெற்ற எம்.ஓ.பி.வைஷ்ணவா கல்லூரி அணிக்கு 25,000 ரூபாய் மற்றும் கோப்பை, சான்றிதழ்களை கோவை மாவட்ட கூடைப்பந்து கழக துணைத் தலைவரும், ஆட்டோ பிரிண்ட் இயக்குனருமான அசோக் வழங்கினார்.

இரண்டாம் பரிசு 20,000 ரூபாய் மற்றும் சுழற்கோப்பை மற்றும் சான்றிதழ்களும் பி.எஸ்.ஜி கலை அறிவியல் கல்லூரிக்கும், மூன்றாம் இடம் பெற்ற பி.எஸ்.ஜி.ஆர் கிருஷ்ணம்மாள் பெண்கள் கல்லூரி அணிக்கு 15,000 ரூபாய் மற்றும் சான்றிதழ்களும், நான்காம் இடம் பெற்ற ஹிந்துஸ்தான் பல்கலை., அணிக்கு 10,000 ரூபாயும், அந்த அணியைச் சேர்ந்த தர்ஷிணிக்கு வளரும் வீராங்கனைக்கான 5000 ரூபாய் பரிசும் வழங்கப்பட்டது.

Newsletter