தமிழ்நாட்டுக்கு பெயர் சூட்டி 50 ஆண்டுகள் நிறைவு: அதன் நினைவாக கோவையில் நடைபெற்ற தடகள போட்டிகள்

கோவை: தமிழ்நாடு என்று பெயர் சூட்டப்பட்டு 50 ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி, கோவை நேரு உள் விளையாட்டரங்கில் தடகள போட்டிகள் நடைபெற்றன.


கோவை: தமிழ்நாடு என்று பெயர் சூட்டப்பட்டு 50 ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி, கோவை நேரு உள் விளையாட்டரங்கில் தடகள போட்டிகள் நடைபெற்றன. 

மதாராஸ் என்ற பெயரில் இருந்த நமது மாநிலத்திற்கு தமிழ்நாடு என்று பெயர் சூட்டப்பட்டு 50 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளதை. இதையொட்டி தமிழ் வளர்ச்சித் துறை மற்றும் கலை பண்பாட்டுத் துறை சார்பில் கோவை நேரு உள் விளையாட்டரங்கில் தடகள போட்டிகள் நேற்று நடைபெற்றது.



21 வயதிற்கு உட்பட்டவர்களுக்கான 100 மீட்டர் ஓட்டப்பந்தயம், நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல் என நடைபெற்ற போட்டியில் பல்வேறு பள்ளி மற்றும் கல்லூரிகளை சேர்ந்த 120-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர்.



பல்வேறு போட்டிகளில் முதல் இடம் பிடித்தவர்களுக்கு ரூ.2500, இரண்டாம் இடத்திற்கு ரூ.1500, மூன்றாம் இடம் பிடித்த வீரர்களுக்கு ரூ.1000 என பரிசுகள் வழங்கப்பட்டது.

மேலும், போட்டியில் முதல் இரண்டு இடங்களை பெற்ற வீரர்கள் வரும் 23-ம் தேதி சென்னை நேரு ஸ்டேடியத்தில் நடைபெறும் மாநில அளவிலான போட்டியில் பங்கேற்க உள்ளனர். ஒவ்வொரு மாவட்டத்தில் இருந்தும் 6 வீரர்கள் , 6 பெண் வீராங்கனைகள் பங்கேற்க உள்ளனர்.



மாநில அளவில் பங்கேற்று வெற்றி பெறுபவர்களுக்கு முதல் பரிசாக ரூ.50,000 மற்றும் 4 கிராம் தங்க நாணயம் வழங்கப்படுகிறது. இரண்டு மற்றும் மூன்றாம் இடம் பெறுபவர்களுக்கு பரிசாக ரூ.25,000 மற்றும் ரூ.10,000 பரிசுத் தொகையை தமிழக முதலமைச்சர் வழங்க உள்ளார்.

Newsletter