ஜி.ஆர்.ஜி கோப்பை கூடைப்பந்து போட்டிகள் இன்று துவங்கியது

கோவை: கோவை ஜி.ஆர்.ஜி அறக்கட்டளை நூற்றாண்டு விழா கொண்டாடத்தின் ஒரு பகுதியாக ஜி.ஆர்.ஜி கோப்பை கூடைப்பந்து போட்டிகள் இன்று துவங்கியது.

கோவை: கோவை ஜி.ஆர்.ஜி அறக்கட்டளை நூற்றாண்டு விழா கொண்டாடத்தின் ஒரு பகுதியாக ஜி.ஆர்.ஜி கோப்பை கூடைப்பந்து போட்டிகள் இன்று துவங்கியது.



தமிழகத்தின் தலை சிறந்த எட்டு மகளிர் கல்லூரி அணிகள் இந்த போட்டியில் பங்கேற்கின்றன. 'ஏ' பிரிவில் சென்னை எம்.ஓ.பி வைஷ்ணவி கல்லூரி, எத்திராஜ் கல்லூரி, மதுரை லேடி டோக், கோவை பி.எஸ்.ஜி கிருஷ்ணம்மாள் கல்லூரியும் 'பி' பிரிவில் சென்னை ஹிந்துஸ்தான் பல்கலைக்கழக பெண்கள் அணி, பி.எஸ்.ஜி கலை அறிவியல் கல்லூரி, சென்னை மகளிர் கிறிஸ்துவ கல்லூரி மற்றும் நாமக்கல் பாவை பொறியியல் கல்லூரி அணிகள் பங்கேற்கின்றன. 



ஒவ்வொரு பிரிவில் உள்ள அணிகள் மூன்று போட்டிகளில் விளையாடி வெற்றி அடிப்படையில் அரையிறுதி போட்டிக்கு தகுதி பெறும். இன்று நடைபெற்ற முதல் போட்டியில் லேடி டோக் கல்லூரி அணி பி.எஸ்.ஜி கிருஷ்ணம்மாள் பெண்கள் கல்லூரி அணியை எதிர்த்து விளையாடியது. இதில் பி.எஸ்.ஜி கிருஷ்ணம்மாள் பெண்கள் கல்லூரி அணி 81-46 என்ற புள்ளி கணக்கில் வெற்றி பெற்றது. 



இரண்டாவது போட்டியில் சென்னை இந்துஸ்தான் பல்கலையை எதிர்த்து நாமக்கல் பாவை கல்லூரி அணி விளையாடியது. இதில் இந்துஸ்தான் பல்கலை அணி 66-28 என்ற புள்ளி கணக்கில் வெற்றி பெற்றது. மூன்றாவது போட்டியில் எம்.ஓ.பி வைஷ்ணவி கல்லூரி அணியை எதிர்த்து சென்னை எத்திராஜ் கல்லூரி அணி விளையாடியது. இதில் எம்.ஓ.பி வைஷ்ணவி கல்லூரி அணி 83-42 என்ற புள்ளி கணக்கில் வெற்றி பெற்றது.

Newsletter