2-வது தெற்காசிய அளவிலான சிலம்பம் சாம்பியன்ஷிப்: கோவை சிலம்பாலாயா மாணவர்கள் பதக்கவேட்டை

கோவை: 2-வது தெற்காசிய அளவிலான சிலம்பம் சாம்பியன்ஷிப் போட்டிகளில் கோவையைச் சேர்ந்த சிலம்பாலாயா மாணவர்கள் பதக்கங்களை வென்று குவித்துள்ளனர்.

கோவை: 2-வது தெற்காசிய அளவிலான சிலம்பம் சாம்பியன்ஷிப் போட்டிகளில் கோவையைச் சேர்ந்த சிலம்பாலாயா மாணவர்கள் பதக்கங்களை வென்று குவித்துள்ளனர். 



2-வது தெற்காசிய அளவிலான சிலம்பம் சாம்பியன்ஷிப் போட்டிகள் கன்னியாகுமரி பேருந்து நிலையம் அருகே அமைந்துள்ள சி.எஸ்.ஐ., அரங்கில் கடந்த 13 முதல் 15-ம் தேதி வரையில் நடைபெற்றது. இதில், இந்தியா, நேபாளம், இலங்கை, வங்கதேசம் உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த 450-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். இதில், கோவை மாவட்ட சிலம்பாலயா மாணவர்கள் 10 பேரும், கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த பசவராஜ் மற்றும் கெய்க்வாட் ஆகியோர் சிலம்பாலாயாவில் பயிற்சி பெற்று போட்டியில் பங்கேற்றது குறிப்பிடத்தக்கது.



இப்போட்டியில் 18 தங்கம், 9 வெள்ளி, 3 வெண்கலம் என மொத்தம் 30 பதக்கங்கள், சிலம்பாலாயா மாணவர்கள் வென்று அசத்தி உள்ளனர். இப்போட்டியில் பதக்கம் பெற்ற வீரர்கள் மற்றும் அவர்கள் வெற்றி பெற்ற போட்டிகளின் விபரம் பின்வருமாறு :

சைனி ரிச்: 3 தங்கம் (மான்கொம்பு, ஒற்றை நடுகம்பு , கம்பு சண்டை), 1 வெண்கலம் (இரட்டைக் கம்பு).

பூஜா: 2 தங்கம் (மான்கொம்பு, குழுவீச்சு போட்டி), 1 வெள்ளி (கம்பு சண்டை).

பிரசிலா ஏன்ஜெல்: 1 தங்கம் (குழு கம்பு வீச்சு), 2 வெள்ளி (கம்பு சண்டை, நடுகம்பு வீச்சு).

ஸ்ரீ சாருகேசினி: 2 தங்கம் (குழு கம்பு வீச்சு, கம்பு சண்டை), 1 வெண்கலம் (நடுகம்பு வீச்சு).

நேகா: 1 வெள்ளி (நடு கம்பு வீச்சு).

மோனிஷ்: 3 தங்கம் (மான் கொம்பு, இரட்டை சுருள் வாள்வீச்சு, கம்பு சண்டை) 1 வெள்ளி (இரட்டை வாள்வீச்சு).

சாம் ஆமோஸ்: 1 தங்கம் (மான் கொம்பு). 1 வெள்ளி (கம்பு சண்டை).

பரத்: 1 வெள்ளி (மான் கொம்பு) 

சரண்ராஜ்: 2 தங்கம் (கம்பு சண்டை, கம்பு ஜோடி முறை).2 வெள்ளி (இரட்டை சுருள் வாள் வீச்சு, மான் கொம்பு)

பாலாஜி: 4 தங்கம் (கம்பு சண்டை, இரட்டை நடுகம்பு, மான் கொம்பு, கம்பு ஜோடி முறை)

வெற்றி பெற்ற மாணவர்களை சிலம்பாலயா சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டு. அவர்களுக்கு நிர்வாகிகள் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

Newsletter