ஜி.ஆர்.ஜி., கோப்பை கூடைப்பந்து போட்டிகள் நாளை தொடக்கம்

கோவை: ஜி.ஆர்.ஜி., அறக்கட்டளை நூற்றாண்டு விழாவையொட்டி, ஜி.ஆர்.ஜி கோப்பை கூடைப்பந்து போட்டிகள் நாளை தொடங்குகிறது.

கோவை: ஜி.ஆர்.ஜி., அறக்கட்டளை நூற்றாண்டு விழாவையொட்டி, ஜி.ஆர்.ஜி கோப்பை கூடைப்பந்து போட்டிகள் நாளை தொடங்குகிறது.

இதில், தமிழகத்தின் தலைசிறந்த எட்டு மகளிர் கல்லூரி அணிகள் பங்கேற்கின்றன. 'ஏ' பிரிவில் சென்னை எம்.ஓ.பி வைஷ்ணவி கல்லூரி, எத்திராஜ் கல்லூரி, மதுரை லேடி டோக், கோவை பி.எஸ்.ஜி கிருஷ்ணம்மாள் கல்லூரி அணிகள் இடம்பிடித்துள்ளன. 'பி' பிரிவில் சென்னை இந்துஸ்தான் பல்கலைக்கழக பெண்கள் அணி, பி.எஸ்.ஜி., கலை அறிவியல் கல்லூரி, சென்னை மகளிர் கிறிஸ்துவ கல்லூரி மற்றும் நாமக்கல் பாவை பொறியியல் கல்லூரி அணிகள் பங்கேற்கின்றன. 

ஒவ்வொரு பிரிவிலும் உள்ள அணிகள் மூன்று போட்டிகளில் விளையாடி, வெற்றியின் அடிப்படையில் அரையிறுதிக்கு தகுதிபெறும். இறுதி போட்டியில் வெற்றி பெறும் அணிக்கு ரூ. 25,000 மற்றும் கோப்பை, சான்றிதழ்கள் வழங்கப்படுகிறது. இரண்டாவது பரிசாக ரூ. 20,000, சுழற்கோப்பை மற்றும் சான்றிதழ்களும், மூன்றாம் இடம் பெறும் அணிக்கு ரூ. 15,000 மற்றும் சான்றிதழ்களும், நான்காம் இடம் பெறும் அணிக்கு ரூ. 10,000-ம் வழங்கப்பட உள்ளது. 

போட்டிகள் காலை 6.30 மணி முதல் 10.30 வரையும், மாலை 3.00 மணிக்கு தொடங்கி 7.00 மணி வரையும் கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லூரி உள்விளையாட்டு அரங்கில் நடைபெற உள்ளது. போட்டிகளை கல்லூரி செயலர் நந்தினி ரங்கசாமி தொடங்கி வைக்க உள்ளதாக உடற்பயிற்சி ஆசிரியர் ஜெயசித்ரா தெரிவித்தார்.

Newsletter