டெல்லியில் நடந்த துப்பாகி சுடும் போட்டியில் தங்கம் வென்ற கோவை பெண்

கோவை: டெல்லியில் குமார் சுரேந்திர சிங் நினைவு துப்பாக்கி சுடும் போட்டி நடைபெற்றது.

கோவை: டெல்லியில் குமார் சுரேந்திர சிங் நினைவு துப்பாக்கி சுடும் போட்டி நடைபெற்றது.

தொடர்ந்து 18-ம் ஆண்டாக நடைபெறும் இந்த போட்டியில், கோவையில் இருந்து காயத்ரி நித்யானந்தம் என்ற பெண் கலந்து கொண்டார். இவர் கோயம்புத்தூர் ரைபிள் கிளப்பின் உறுப்பினராவார். 

அங்கு நடைபெற்ற இறுதி போட்டியில் 453.3 புள்ளிகள் பெற்ற காயத்ரி நித்யானந்தம் தனக்கு எதிரான ஹேமா-வை 1.4 என்ற புள்ளி வித்தியாசத்தில் வீழ்த்தினார்.

இவர் கடந்த 2016-ம் ஆண்டு நடைபெற்ற சிறுவர் உலகக் கோப்பைக்கான துப்பாக்கி சுடும் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter