கோவையில் நடைபெற்ற தேசிய அளவிலான எம்.ஆர்.எப் கார் பந்தயத்தில் சீறி பாய்ந்த கார்கள்

கோவை: செட்டிபாளையம் கரி மோட்டார் ஸ்பீட்வேவில் தேசிய அளவிலான இரண்டாவது சுற்று கார் பந்தயங்கள் இன்று நடைபெற்றது.


கோவை: செட்டிபாளையம் கரி மோட்டார் ஸ்பீட்வேவில் தேசிய அளவிலான இரண்டாவது சுற்று கார் பந்தயங்கள் நேற்று à®¨à®Ÿà¯ˆà®ªà¯†à®±à¯à®±à®¤à¯. 



எம்.ஆர்.எப் எப்.1600, இந்தியன் டூரிங் கார்ஸ், சூப்பர் ஸ்டாக், இந்தியன் ஜூனியர் டூரிங் கார்ஸ், பார்முலா எல்.ஜி.பி 1300 என்ற பிரிவுகளில் நடைபெற்ற போட்டிகளில் முன்னணி வீரர்கள் பங்கேற்றனர்.

15 சுற்றுகள் கொண்ட இந்தியன் டூரிங் கார்ஸ் பிரிவில் ஆர்கா மோட்டார் ஸ்போர்ட்ஸ் வீரர் ஆஷிஷ் ராமசாமி பிப்ரவரி மாதம் சென்னையில் நடைபெற்ற போட்டியில் இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்று முன்னிலையில் இருந்தார். இன்று நடைபெற்ற போட்டியில் அவரது கார் பழுதடைந்ததை அடுத்து போட்டியில் இருந்து விலகினார்.

வெற்றியாளர்கள்

இதனையடுத்து, ஐந்து வருடங்களுக்குப் பிறகு பங்கேற்ற ரேஸ் கான்சப்ட்ஸ் அணியில் கோவை வீரர் அர்ஜூன் பாலு முதலிடத்தையும், பிரைம் ரேசிங் அணி வீரர்கள் வித்யபிரகாஷ் இரண்டாம் இடத்தையும், விஜயகுமார் மூன்றாம் இடத்தையும் பிடித்தனர். இம்மூவரும் கோவையை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

வோல்ஸ்வேகன் ஆமியோ கப் போட்டியில் கோலாப்பூர் வீரர் துருவ் மோஹித் முதல் இடத்தையும், ஹைதராபாத் வீரர் ஜீத் ஜபக் இரண்டாம் இடத்தையும், தானே வீரர் சவுரவ் பந்த்யோபதாய் மூன்றாவது இடம் பிடித்தனர்.

பார்முலா எல்.ஜி.பி.1600 போட்டியில் சென்னை வீரர் அஷ்வின் தத்தா முதலிடமும், மாமல்லபுரம் வீரர் ராகுல் ரங்கசாமி இரண்டாம் இடத்தையும், மற்றொரு சென்னை வீரர் நிர்மல் உமாசங்கர் மூன்றாம் இடத்தையும் பிடித்தனர்.

சூப்பர் ஸ்டாக் பிரிவில் ரேஸ் கான்சப்ட்ஸ் அணி வீரர் வருண் அனேக்கர் முதலிடமும், இன்பினிட் பிஸ்டன் அணி வீரர் தீபக் ரவிக்குமார் இரண்டாம் இடமும், பெர்பாமன்ஸ் ரேசிங் வீரர் சீனிவாஸ் தேஜா மூன்றாவது இடத்தையும் பிடித்தனர்.

இந்தியன் ஜூனியர் டூரிங் கார்ஸ் பிரிவில் யுனிமெக் ரேசிங் வீரர் கிரிஸ் டிசாசோ முதலிடமும், ஆர்கா மோட்டார் ஸ்போர்ட்ஸ் வீரர் பிரபு இரண்டாம் இடமும்,பெற்றனர்.

பார்முலா எல்.ஜி.பி 1300-ன் கீழ் இரண்டு போட்டிகள் நடைபெற்றது. முதல் போட்டியில் எம்.ஸ்போர்ட் வீரர் ஷோஹில் ஷா முதலிடமும், எம்.ஸ்போர்ட் வீரர் நபில் ஹுசேன் இரண்டாம் இடமும், டி.டி.எஸ் ரேசிங் அணி வீரர் பாலபிரசாத் மூன்றாவது இடமும் பிடித்தனர்.

இரண்டாவது போட்டியில் அஷ்வின் தத்தா முதல் இடத்தையும், ரூபேஷ் சிவக்குமார் இரண்டாம் இடத்தையும், நபில் ஹூசேன் மூன்றாம் இடத்தையும் பெற்றனர். மீதமுள்ள சுற்றுகள் நாளை நடைபெறுகிறது. இதன் பின்னர் மூன்றாவது, நான்காவது மற்றும் ஐந்தாவது சுற்று போட்டிகள் சென்னையில் நடைபெறும் என்று போட்டி ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்தனர்.

Newsletter