இந்தியன் தேசிய மோட்டார் சைக்கிள் பந்தய சாம்பியன்ஷிப் போட்டிகள் நாளை தொடக்கம்

கோவை: கரி மோட்டார் ஸ்பீடுவேயில் இந்தியன் தேசிய மோட்டார் சைக்கிள் பந்தய சாம்பியன்ஷிப் போட்டிகள் நாளை தொடங்குகிறது.

கோவை: கரி மோட்டார் ஸ்பீடுவேயில் இந்தியன் தேசிய மோட்டார் சைக்கிள் பந்தய சாம்பியன்ஷிப் போட்டிகள் நாளை தொடங்குகிறது.

செட்டிபாளையத்தில் அமைந்துள்ள கரி மோட்டார் ஸ்பீடுவேயில் பல்வேறு பிரிவுகளில் நடக்கும் இந்தப் பந்தயத்தில், உலகின் முன்னணி வீரர்கள் பங்கேற்றாலும், டி.வி.எஸ்., ரேசிங், ஹோண்டா டென்10 ரேசிங் அணிகளின் வீரர்களே ஆதிக்கம் செலுத்த உள்ளனர். அதுமட்டுமில்லாமல், 5 சுற்றுகளைக் கொண்ட தேசிய சாம்பியன்ஷிப் போட்டியில் டி.வி.எஸ்., மற்றும் ஹோண்டாவின் ஒன் மேக் சாம்பியன்ஷிப் பந்தயங்கள் நடத்தப்படுகிறது. எம்.எம்.எஸ்.சி., சார்பில் 'டி.வி.எஸ்., ஒன் மேக் சாம்பியன்ஷிப் 2018' என்ற பந்தயம் நடத்தப்பட இருக்கிறது.



அப்பாச்சி ஆர்.ஆர்., 310 ஓபன் பிரிவு, அப்பாச்சி ஆர்.டி.ஆர்., 200 ஓபன் பிரிவு மற்றும் அப்பாச்சி ஆர்.டி.ஆர்., 180 ஓபன் பிரிவுகளில் போட்டிகள் நடத்தப்படவிருக்கிறது. தீபக் ரவிக்குமார், விவேக் பிள்ளை, அருண் முத்துகிருஷ்ணன், அபிஷேக் வாசுதேவ் மற்றும் அமர்நாத் மேனன் ஆகிய வீரர்கள் கடந்த ஆண்டு 300-400 சிசி பிரிவுகளில் சாம்பியன் பட்டங்களை வென்றவர்களாவர். இதேபோல, பெண்கள் பிரிவில் ரேஹனா பி, ஹரிதரணி மற்றும் ஹரிதா ஆர் ஆகியோர் சிறந்த வீராங்கனைகளாவார். இந்த வார இறுதியில் பயிற்சி போட்டிகள் மற்றும் தகுதிச் சுற்றுகள் அல்லாமல், 14 சுற்றுகள் நடைபெற உள்ளன.

Newsletter