அகில இந்திய அளவிலான கூடைப்பந்து போட்டியில் சென்னை சுங்கவரி துறை அணி சாம்பியன்

கோவை: கோவையில் நடைபெற்ற அகில இந்திய அளவிலான கூடைப்பந்து போட்டியில் சென்னை சுங்கவரி துறை அணி சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றியது.

கோவை: à®•ோவையில் நடைபெற்ற அகில இந்திய அளவிலான கூடைப்பந்து போட்டியில் சென்னை சுங்கவரி துறை அணி சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றியது. 



கோவை மாவட்ட கூடைப்பந்து கழகம் சார்பில் ஆண்களுக்கான 53-வது நாச்சிமுத்து கவுண்டர் கோப்பை போட்டியும், பெண்களுக்கான 17-வது சி.ஆர்.ஐ.பம்ப் கோப்பை போட்டிகளும் கடந்த 27-ம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. இருபிரிவுகளிலும் தலா 8 அணிகள் பங்கேற்ற இப்போட்டியின் இறுதி ஆட்டங்கள் இன்று நடைபெற்றன. 



ஆண்கள் பிரிவில் சென்னை சுங்கவரி துறை அணியை எதிர்த்து டெல்லி இந்தியன் ரயில்வே அணியுடன் விளையாடியது. இதில், சென்னை சுங்கவரி துறை அணி 69-63 என்ற புள்ளிகள் அடிப்படையில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை வென்றது. அந்த அணிக்கு முதல் பரிசாக ரூ. 1 லட்சம் மற்றும் நாச்சிமுத்து கவுண்டர் சுழற்கோப்பையும் வழங்கப்பட்டது. 2-வது இடத்தைப் பிடித்த டெல்லி இந்தியன் ரயில்வே அணிக்கு ரூ. 50,000 ரொக்கம் மற்றும் டாக்டர் மகாலிங்கம் கோப்பையும் வழங்கப்பட்டது. அரையிறுதிப் போட்டியில் தோல்வியடைந்த பெங்களூரு ஏ.எஸ்.சி மற்றும் நியூ டெல்லி விமானப் படை ஆகிய அணிகளுக்கு ரூ. 15,000 ஆறுதல் பரிசு வழங்கப்பட்டது.



இதேபோல, பெண்கள் பிரிவில் கொல்கத்தா கிழக்கு ரயில்வே அணியை 59-43 என்ற புள்ளி கணக்கில் வீழ்த்தி திருவனந்தபுரம் கேரள மின்வாரிய அணி கோப்பையைக் கைப்பற்றியது. அந்த அணிக்கு ரூ. 50,000 மற்றும் சி.ஆர்.ஐ., பம்ப்ஸ் சுழற்கோப்பையும் வழங்கி கவுரவிக்கப்பட்டது. தோல்வியடைந்த கொல்கத்தா கிழக்கு ரயில்வே அணிக்கு ரூ. 25,000 மற்றும் சுழற்கோப்பையும் வழங்கப்பட்டது. 3-வது மற்றும் 4-வது இடங்களைப் பிடித்த à®¤à®¿à®°à¯à®µà®©à®¨à¯à®¤à®ªà¯à®°à®®à¯ கேரள காவல்துறை மற்றும் தமிழ்நாடு ஜூனியர்ஸ் ஆகிய அணிகளுக்கு தலா ரூ. 10,000 வழங்கப்பட்டது. 



மேலும், சிறந்த நம்பிக்கைக்கான விளையாட்டு வீராங்கனைக்கான விருதை தமிழ்நாடு ஜூனியர்ஸ் வீராங்கனை எஸ். கிருத்திகா பெற்றார். நன்னடத்தைக்கான ரேணுகா ராமநாதன் நினைவு விருது நியூ டெல்லி இந்தியன் ரயில்வே அணிக்கு கொடுக்கப்பட்டது. வெற்றி பெற்றவர்களுக்கு மாநகர காவல் துணை ஆணையர் தர்மராஜன் பரிசுகளை வழங்கினார். பரிசளிப்பு விழாவில் கோவை மாவட்ட கூடைப்பந்து கழக தலைவரும் சி.ஆர்.ஐ குழுமங்களின் இணை நிர்வாக இயக்குநருமான செல்வராஜ் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Newsletter