நாச்சிமுத்து கவுண்டர் கோப்பை, சி.ஆர்.ஐ பம்ப் கோப்பைக்கான கூடைப்பந்து போட்டி

கோவை: கோவை மாவட்ட கூடைபந்து கழகம் சார்பில் 53-வது நாச்சிமுத்து கவுண்டர் கோப்பை ஆண்களுக்கான போட்டிகள் மற்றும் பதினேழாவது சி.ஆர்.ஐ.பம்ப் கோப்பை பெண்களுக்கான போட்டிகளில் இந்தியாவின் தலைசிறந்த 8 அணிகளான பஞ்சாப் போலீஸ், புதுடில்லி-இந்திய விமானப்படை, சென்னை- வருமான வரி அணி, சென்னை அரைஸ் ஸ்டீல்ஸ், டெல்லி இந்தியன் ரயில்வே அணி, பெங்களூரு ஏ.சி.எஸ், புது டெல்லி வருமான வரி அணி மற்றும் கோவை மாவட்ட கூடைப்பந்து அணிகள் பங்கேற்றன.

புள்ளிகள் அடிப்படையில் முன்னணி பெற்ற நான்கு அணிகள் அரை இறுதி போட்டியில் விளையாடியது.

ஆண்கள் பிரிவில் நியூ டெல்லி இந்திய விமான படை அணியை எதிர்த்து டெல்லி இந்தியன் ரயில்வே அணி விளையாடியது.

இதில் டெல்லி இந்தியன் ரயில்வே அணி 79-68 என்ற புள்ளி கணக்கில் வெற்றி பெற்று இறுதி போட்டிக்கு முன்னேறியது. மற்றொரு போட்டியில் பெங்களூரு ஏ.சி.எஸ் அணியுடன் சென்னை சுங்கவரி அணி விளையாடியது.

முதல் மூன்று செட்களில் புள்ளிகள் அடிப்படையில் பின் தங்கியிருந்த சென்னை சுங்கவரி அணி நான்காவது செட்டில் சுதாரித்து விளையாடியது. கடைசி நிமிடத்தில் இரு அணிகளும் 52-52 என்று இருந்த நிலையில் 15 நொடிகளே மீதமிருந்த போது 2 புள்ளிகள் எடுத்து சென்னை சுங்கவரி அணி 54-52 என்ற புள்ளிகள் பெற்று வெற்றி பெற்று இறுதி போட்டிக்கு முன்னேறியது.

நாளை சென்னை சுங்கவரி அணி, டெல்லி இந்தியன் ரயில்வே அணியுடன் விளையாடுகிறது. பெண்கள் பிரிவில் தமிழ்நாடு ஜூனியர்ஸ் அணியை எதிர்த்து கொல்கத்தா கிழக்கு ரயில்வே அணி விளையாடியது. இதில் கொல்கத்தா கிழக்கு ரயில்வே அணி 73-45 என்ற புள்ளி கணக்கில் வெற்றி பெற்று இறுதி போட்டிக்கு முன்னேறியது.

மற்றொரு போட்டியில் திருவனந்தபுரம் கேரள மின்வாரிய அணி திருவனந்தபுரம் கேரள போலீஸ் அணியை எதிர்த்து விளையாடியது. இதில் மின்வாரிய அணி 64-39 என்ற புள்ளி கணக்கில் வெற்றி பெற்று இறுதி போட்டிக்கு முன்னேறியது.

நாளை நடைபெறும் இறுதி போட்டியில் திருவனந்தபுரம் கேரள மின்வாரிய அணி கொல்கத்தா கிழக்கு ரயில்வே அணியுடன் விளையாடுகிறது.

Newsletter