கோவையில் 53-வது நாச்சிமுத்து கவுண்டர் கோப்பை கூடைப்பந்து போட்டி : இன்று அரையிறுதி ஆட்டங்கள்

கோவை: கோவையில் நடைபெற்று வரும் 53-வது நாச்சிமுத்து கவுண்டர் கோப்பைக்கான கூடைப்பந்து போட்டியின் அரையிறுதி ஆட்டங்கள் இன்று மாலை நடக்கிறது.

கோவை: à®•ோவையில் நடைபெற்று வரும் 53-வது நாச்சிமுத்து கவுண்டர் கோப்பைக்கான கூடைப்பந்து போட்டியின் அரையிறுதி ஆட்டங்கள் இன்று மாலை நடக்கிறது. 

கோவை மாவட்ட கூடைப்பந்து கழகம் சார்பில் 53-வது நாச்சிமுத்து கவுண்டர் கோப்பை ஆண்களுக்கான போட்டிகள் மற்றும் பதினேழாவது சி.ஆர்.ஐ.பம்ப் கோப்பை பெண்களுக்கான போட்டிகள் நேரு ஸ்டேடியம் அருகில் உள்ள திறந்தவெளி மைதானத்தில் நடைபெற்று வருகிறது. நான்காவது நாளான நேற்று நடைபெற்ற போட்டிகளில் ஆண்கள் பிரிவில் நியூ டெல்லி இந்தியன் ரயில்வே அணி ஏ.எஸ்.சி பெங்களூரு அணியை எதிர்த்து விளையாடியது. இதில், ஏ.எஸ்.சி பெங்களூரு அணி 71-45 என்ற புள்ளி கணக்கில் வெற்றி பெற்றது. மற்றொரு ஆட்டத்தில், நியூடெல்லி இந்திய விமானப் படை அணி, 78-74 என்ற புள்ளிகள் அடிப்படையில் பஞ்சாப் போலீஸ் அணியை வீழ்த்தியது. 



பெண்கள் பிரிவில் தமிழ்நாடு ஜூனியர்ஸ் அணியுடன் கோவை மாவட்ட கூடைப்பந்து கழக அணி விளையாடியது. இதில், 61-57 என்ற புள்ளிகள் பெற்று தமிழ்நாடு ஜூனியர்ஸ் அணி வெற்றி பெற்றது. இரண்டாவது போட்டியில் மைசூர் ஸ்போர்ட்ஸ் ஹாஸ்டல் அணி, 81-25 என்ற புள்ளி கணக்கில் கேரள மின்வாரிய அணியிடம் தோற்றது. 3-வது போட்டியில் கொல்கத்தா கிழக்கு ரயில்வே அணியும், ஹூப்ளி தென்மேற்கு ரயில்வே அணியும் பலப்பரீட்சை நடத்தின. பரபரப்பாக நடைபெற்ற இந்தப் போட்டியில், 69-68 என்ற கணக்கில் ஹூப்ளி தென்மேற்கு ரயில்வே அணி த்ரில் வெற்றி பெற்றது. 4-வது போட்டியில் கேரள போலீஸ் அணி 58-51 என்ற புள்ளி கணக்கில் சென்னை அரைஸ் ஸ்டீல்ஸ் அணியை வீழ்த்தியது. 

இன்று மாலை நடைபெறும் ஆண்கள் பிரிவின் முதல் அரையிறுதிப் போட்டியில், இந்திய விமானப் படை அணியை எதிர்த்து இந்தியன் ரயில்வே அணி விளையாடுகிறது. 2-வது அரையிறுதியில் ஏ.எஸ்.சி. அணியும், கஸ்டம்ஸ் அணியும் பலப்பரீட்சை நடத்துகின்றன. பெண்கள் பிரிவின் முதல் அரையிறுதி போட்டியில் கிழக்கு ரயில்வே அணியை எதிர்த்து தமிழ்நாடு ஜுனியர்ஸ் அணி விளையாடுகிறது. மற்றொரு ஆட்டத்தில், கேரளா மாநில மின்சார வாரிய அணியும், கேரளா போலீஸ் அணியும் மல்லுக்கட்ட இருக்கிறது.

Newsletter