நாச்சிமுத்து கவுண்டர் கோப்பை, சி.ஆர்.ஐ. பம்ப் கோப்பை கூடைப்பந்து போட்டி : வெற்றி விபரம்

கோவை: மாவட்ட கூடைப்பந்து கழகம் சார்பில் 53-வது நாச்சிமுத்து கவுண்டர் கோப்பை ஆண்களுக்கான போட்டிகள் மற்றும் பதினேழாவது சி.ஆர்.ஐ.பம்ப் கோப்பை பெண்களுக்கான போட்டிகள் நேரு ஸ்டேடியம் அருகில் உள்ள மைதானத்தில் நடைபெற்று வருகிறது.


கோவை: à®®à®¾à®µà®Ÿà¯à®Ÿ கூடைப்பந்து கழகம் சார்பில் 53-வது நாச்சிமுத்து கவுண்டர் கோப்பை ஆண்களுக்கான போட்டிகள் மற்றும் பதினேழாவது சி.ஆர்.ஐ.பம்ப் கோப்பை பெண்களுக்கான போட்டிகள் நேரு ஸ்டேடியம் அருகில் உள்ள மைதானத்தில் நடைபெற்று வருகிறது.



நேற்றைய ஆண்கள் பிரிவு முதல் போட்டியில் ஏ.எஸ்.சி பெங்களூரு அணியை எதிர்த்து நியூ டெல்லி வருமான வரி துறை அணி விளையாடியது. இதில் ஏ.எஸ்.சி பெங்களூரு அணி 68-64 என்ற புள்ளி கணக்கில் வெற்றி பெற்றது. பெண்கள் பிரிவில் மைசூர் ஸ்போர்ட்ஸ் ஹாஸ்டல் அணியை எதிர்த்து தமிழ்நாடு ஜூனியர்ஸ் அணி விளையாடியது. 



இதில் தமிழ்நாடு ஜூனியர்ஸ் அணி 65-26 என்ற புள்ளி கணக்கில் எளிதில் வெற்றி பெற்றது. ஆண்களுக்கான இரண்டாவது போட்டியில் நியூ டெல்லி இந்தியன் ரயில்வே அணியை எதிர்த்து கோவை மாவட்ட கூடைப்பந்து கழக அணி மோதியது.இதில் இந்தியன் ரயில்வே அணி 92-47 என்ற புள்ளிகள் அடிப்படையில் வெற்றி பெற்றது. பெண்கள் பிரிவில் கிழக்கு ரயில்வே கொல்கத்தா அணியை எதிர்த்து திருவனந்தபுரம் கேரள போலீஸ் அணி விளையாடியது. இதில் கிழக்கு ரயில்வே கொல்கத்தா அணி 53-35 என்ற புள்ளி கணக்கில் வெற்றி பெற்றது.



மூன்றாவது போட்டி ஆண்கள் பிரிவில் பஞ்சாப் போலீஸ் அணி சென்னை அரைஸ் ஸ்டீல்ஸ் அணியை எதிர்த்து விளையாடியது. இதில் சென்னை அரைஸ் ஸ்டீல்ஸ் அணி 81-69 என்ற புள்ளி கணக்கில் வெற்றி பெற்றது. நான்காவது போட்டியில் டெல்லி இந்திய விமானப் படை அணியை எதிர்த்து சென்னை வருமான வரி அணி விளையாடியது.

பரபரப்பான இந்த போட்டியில் இரு அணிகளும் மாறி மாறி புள்ளிகள் பெற்று 68-69 என்ற சம நிலை இருந்த போது மழை காரணமாக ஆட்டம் நிறுத்தப்பட்டது. மழை காரணமாக நிறுத்தி வைக்கப்பட்ட விளையாட்டு மீண்டும் இன்று புதிதாக விளையாட உள்ளனர்.

Newsletter