கவுண்டி கிரிக்கெட் தொடரில் இருந்து கோஹ்லி விலகல்

இங்கிலாந்து நாட்டின் உள்ளூர் கிரிக்கெட் தொடரான கவுண்டி கிரிக்கெட் போட்டியில் இருந்து காயம் காரணமாக இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி விலகினார்.

இங்கிலாந்து நாட்டின் உள்ளூர் கிரிக்கெட் தொடரான கவுண்டி கிரிக்கெட் போட்டியில் இருந்து காயம் காரணமாக இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி விலகினார்.

ஜுலை மாதம் இங்கிலாந்து செல்லும் இந்திய அணி டி20, ஒருநாள் மற்றும் டெஸ்ட போட்டிகள் அடங்கிய கிரிக்கெட் தொடரில் பங்கேற்க இருக்கிறது. இரு அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டி வரும் ஜுலை 3-ம் தேதி நடக்கவுள்ளது. டெஸ்ட் தொடரில் சிறப்பாக வெளியாடுகவதற்காக, இத்தொடருக்கு முன்னதாக இங்கிலாந்தின் பாரம்பரிய மிக்க உள்ளூர் தொடரான கவுண்டி சாம்பியன்ஷிப் தொடரில் பங்கேற்க இருந்தார். இதற்காக, சர்ரே அணியில் இணைய இருந்தார்.

இந்த நிலையில், கோஹ்லியின் கழுத்துப் பகுதியில் காயம் ஏற்பட்டுள்ளது. இந்தக் காயம் குணமாக 3 வாரம் தேவைப்படும் என்பதால், கவுண்டி சாம்பியன்ஷிப்பில் இருந்து விலகியுள்ளார். அயர்லாந்து மற்றும் இங்கிலாந்து தொடருக்கு முன்னதாக, கோஹ்லி உடற்தகுதி பெற்றுவிடுவார் என பி.சி.சி.ஐ., நம்பிக்கை தெரிவித்துள்ளது.

Newsletter