ஆப்கனுக்கு எதிரான டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணிக்கு ரகானே கேப்டன்

ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணிக்கு ரகானே கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணிக்கு ரகானே கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

ஆப்கானிஸ்தான் அணி கடந்த ஆண்டு டெஸ்ட் போட்டியில் விளையாடும் அந்தஸ்தைப் பெற்றது. ஆப்கானிஸ்தான் கிரிக்கெட்டிற்கு அதிக அளவில் ஆதரவு அளித்து வரும் இந்திய கிரிக்கெட் வாரியம், வரலாற்று சிறப்புமிக்க ஆப்கானிஸ்தானுக்கு எதிரான முதல் டெஸ்டில் இந்திய கிரிக்கெட் அணி விளையாடும் என முடிவு செய்தது. இதுகுறித்து ஏற்கனவே அதிகாரப்பூர்வமாக அறிவித்த பி.சி.சி.ஐ., அடுத்த மாதம் 14-ந்தேதி முதல் 18-ந்தேதி வரை பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் இந்தப் போட்டி நடைபெறும் என அறிவித்தது.

ஆப்கானிஸ்தானுக்கு எதிரான இந்த டெஸ்டில் விளையாடும் இந்திய அணி இன்று மாலை அறிவிக்கப்பட்டது, கவுன்டி போட்டியில் விளையாட விராட் கோலி விரும்பியதால் அவருக்கு ஓய்வு கொடுக்கப்பட்டுள்ளது. அவருக்குப் பதிலாக ரகானே கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். அவரும் ஒருசில முன்னணி வீரர்களும் இந்த டெஸ்டில் விளையாடுகிறார்கள்.

ஆப்கானிஸ்தான் டெஸ்டிற்கான இந்திய அணியில் இடம்பிடித்துள்ள வீரர்கள் விவரம்:-

1. ரகானே (கேப்டன்), 2. தவான், 3. முரளி விஜய், 4. லோகேஷ் ராகுல், 5. புஜாரா, 6. கருண் நாயர், 7. சகா (விக்கெட் கீப்பர்), 8. அஸ்வின், 9. ஜடேஜா, 10. குல்தீப் யாதவ், 11. உமேஷ் யாதவ், 12. முகமது ஷமி, 13. ஹர்திக் பாண்டியா, 14. இசாந்த் சர்மா, 15. சர்துல் தாகூர்.

இதேபோல, அயர்லாந்து, இங்கிலாந்து அணிகளுக்கு எதிரான இந்திய டி20 அணியும் அறிவிக்கப்பட்டுள்ளது. அணியில் விராட் கோலி (கேப்டன்), ஷிகர் தவான், ரோஹித் சர்மா, கே.எல்.ராகுல், ரெய்னா, மணிஷ் பாண்டே, தோனி, தினேஷ் கார்த்திக், சாஹல், குல்திப், வாஷிங்டன் சுந்தர், புவனேஸ்வர் குமார்,பும்ரா, ஹர்திக் பாண்டியா, சித்தார்த் கவுல், உமேஷ் யாதவ் உள்ளிட்டோர் இடம் பெற்றுள்ளனர்.

Newsletter