விளையாட்டின் உயரிய விருதான கேல் ரத்னா விருதுக்கு கோலியின் பெயர் பரிந்துரை

விளையாட்டுத் துறையினருக்கு வழங்கப்படும் மிக உயரிய விருதான கேல் ரத்னா விருதுக்கு விராட் கோலி பெயரை மத்திய அரசுக்கு பி.சி.சி.ஐ. பரிந்துரை செய்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

விளையாட்டுத் துறையினருக்கு வழங்கப்படும் மிக உயரிய விருதான கேல் ரத்னா விருதுக்கு விராட் கோலி பெயரை மத்திய அரசுக்கு பி.சி.சி.ஐ. பரிந்துரை செய்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்தியாவில் விளையாட்டுத் துறையில் சாதித்தவர்களுக்கு வழங்கப்படும் விருதுகளில் மிக உயரிய விருது ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது. இந்த ஆண்டு கேல் ரத்னா விருதுக்கு கிரிக்கெட் அணி கேப்டன் விராட் கோலியின் பெயரை மத்திய அரசுக்கு பி.சி.சி.ஐ. பரிந்துரை செய்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இதேபோல, வாழ்நாள் சாதனையாளர் விருதான, தயான் சந்த் விருதுக்கு சுனில் கவாஸ்கரின் பெயரை பரிந்துரை செய்திருப்பதாக கூறப்படுகிறது.

இந்திய கிரிக்கெட் அணியில் தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் கோலியின் பெயரை கடந்த ஆண்டும் கேல் ரத்னா விருதுக்கு பி.சி.சி.ஐ. பரிந்துரை செய்திருந்தது. முன்னதாக, சிறந்த விளையாட்டு வீரர், விராங்கனைகளுக்கு வழங்கப்படும் அர்ஜுனா விருதுக்கு இந்திய கிரிக்கெட் அணியை சேர்ந்த ஷிகர் தவான், மகளிர் அணியைச் சேர்ந்த ஸ்மிரிதி மந்தனா ஆகியோரின் பெயர்கள் பரிந்துரை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Newsletter