கேப்டன் பதவியை ராஜினமா செய்தார் காம்பீர் : டெல்லிக்கு புதிய கேப்டன் நியமனம்

ஐ.பி.எல்., கிரிக்கெட் தொடரில் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் டெல்லி டேர்டெவில்ஸ் அணியின் தொடர் தோல்விக்குப் பொறுப்பேற்று அந்த அணியின் கேப்டன் கவுதம் கம்பீர் பதவி விலகுவதாக அறிவித்துள்ளார்.

ஐ.பி.எல்., கிரிக்கெட் தொடரில் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் டெல்லி டேர்டெவில்ஸ் அணியின் தொடர் தோல்விக்குப் பொறுப்பேற்று அந்த அணியின் கேப்டன் கவுதம் கம்பீர் பதவி விலகுவதாக அறிவித்துள்ளார். 

ஐ.பி.எல்., தொடர் போட்டிகள் கடந்த 7-ம் தேதி தொடங்கியது. இதில், சென்னை, டெல்லி, மும்பை, ஐதராபாத், கொல்கத்தா, பஞ்சாப், பெங்களூரு, ராஜஸ்தான் ஆகிய 8 அணிகள் பங்கேற்று விளையாடி வருகின்றன. ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் இரண்டு முறை மோத வேண்டும். லீக் போட்டிகளின் முடிவில் முதல் நான்கு இடங்களைப் பிடிக்கும் அணிகள் பிளே ஆப் சுற்றுக்கு தகுதிபெறும். இந்நிலையில், இந்தாண்டு நடைபெற்று வரும் போட்டிகளில் டெல்லி மற்றும் மும்பை அணிகள் இதுவரை விளையாடிய 6 போட்டிகளில், ஐந்து போட்டிகளில் தோல்வியடைந்து புள்ளிப்பட்டியலில் கடைசி இரண்டு இடங்களில் உள்ளன. 

இதையடுத்து, தொடர் தோல்விகளுக்குப் பொறுப்பேற்று டெல்லி டேர்டெவில்ஸ் அணியின் கேப்டன் கவுதம் காம்பீர் பதவி விலகுவதாக அறிவித்துள்ளார். இதையடுத்து, டெல்லி அணியின் புதிய கேப்டனாக ஷ்ரேயாஸ் அய்யர் நியமிக்கப்பட்டுள்ளார். டெல்லி அணி அடுத்து 27-ம் தேதி நடைபெற உள்ள லீக் ஆட்டத்தில் கொல்கத்தா அணியை எதிர்கொள்ள உள்ளது. புதிய கேப்டன் தலைமையில் களமிறங்க இருக்கும் அந்த அணி, இந்தப் போட்டியில் வெற்றி பெரும் என ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

Newsletter