ஜூனியர் பெடரேசன் தடகள போட்டி : தமிழகத்திற்கு இரண்டாமிடம்

கோவை : 16-வது ஜூனியர் பெடரேசன் தடகள போட்டிகளில் ஹரியானா முதலிடமும், தமிழ்நாடு இரண்டாம் இடத்தையும் பிடித்தது.

கோவை : 16-வது ஜூனியர் பெடரேசன் தடகள போட்டிகளில் ஹரியானா முதலிடமும், தமிழ்நாடு இரண்டாம் இடத்தையும் பிடித்தது.

தமிழ்நாடு தடகள சங்கம், கோவை தடகள சங்கம் மற்றும் கிருஷ்ணா கல்வி குழுமங்கள் சார்பில் 16-வது ஜூனியர் பெடரேசன் தடகள போட்டிகள் கோவை நேரு விளையாட்டு அரங்கில் நடைபெற்றது.

16 வயது முதல் 20 வயதிற்கு உட்பட்டோருக்கான போட்டியில் ஆந்திரா, பீகார், கர்நாடகா, ஒடிசா, டெல்லி, உத்திரப்பிரதேசம், குஜராத், கேரளா உள்ளிட்ட 27 மாநிலங்களைச் சேர்ந்த 840 வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் பங்கேற்றனர். 

இதில் 100 மீட்டர் முதல் 10,000 மீட்டர் வரையிலான ஓட்டப்பந்தய போட்டிகள், தடை தாண்டுதல், நீளம் தாண்டுதல் மற்றும் உயரம் தாண்டுதல் என 46 வகையான போட்டிகள் நடைபெற்றது.

இதில் பஞ்சாப் மாநில வீரர் குர்வீந்தர் சிங் 100 மீட்டர் ஓட்டபந்தயத்தில் 10.47 விநாடிகளில் கடந்து புதிய சாதனை படைத்தார். 4x400 மீட்டர் ஓட்டபந்தயத்தில் தமிழக மாணவர்கள் 40.56 விநாடிகளில் கடந்து புதிய சாதனை படைத்தனர். குண்டு எறிதல் போட்டியில் ஹரியானா வீரர் ஆஷிஷ் ஜாகர் 75.04 மீட்டர் தூரம் எறிந்து புதிய சாதனை படைத்தார். 

கடந்த மூன்று நாட்களாக நடைபெற்று வந்த இந்த போட்டிகள் இன்றுடன் நிறைவுற்றது. இதில் 177.50 புள்ளிகளுடன் ஹரியானா முதலிடத்தையும், 151.50 புள்ளிகளுடன் தமிழகம் இரண்டாம் இடத்தையும் பிடித்தது.

சிறந்த வீரர்களுக்காக பெண்கள் பிரிவில் 91 புள்ளிகளுடன் முதலிடத்தை மஹாராஷ்ட்ராவும், 74 புள்ளிகளுடன் தமிழ்நாடு இரண்டாம் இடத்தையும் பிடித்தது. ஆண்கள் பிரிவில் 132.50 புள்ளிகளுடன் ஹரியானா முதலிடத்தையும், 77.50 புள்ளிகளுடன் தமிழகம் இரண்டாம் இடத்தையும் பிடித்தது.

சிறந்த வீரர்கள் 

குண்டு எறிதல் போட்டியில் புதிய சாதனை படைத்த ஹரியானா மாநில வீரர் ஆஷிஷ் ஜாஹரும்,100 மீட்டர் தடை தாண்டும் போட்டியில் வெற்றி பெற்ற ஜார்கண்ட் வீராங்கனை சப்னாகுமாரியும் சிறந்த வீரர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டனர். 

வெற்றி பெற்றவர்களுக்கு கிருஷ்ணா கல்வி குழுமங்களின் நிர்வாக அறங்காவலர் மலர்விழி, தெற்கு சட்டமன்ற தொகுதி உறுப்பினர் அம்மன் அர்ஜூணன் ஆகியோர் பரிசுகளை வழங்கினர். இந்நிகழ்ச்சியில், தமிழ்நாடு தடகள சங்க துணை செயலாளர் லதா, கோவை மாவட்ட தடகள சங்க தலைவர் டாக்டர்.தங்கவேல் ஆகியோர் பங்கேற்றனர்.

Newsletter