மீடியா டி-20 கிரிக்கெட்: முதல் போட்டியில் டெக்கான் அணி வெற்றி

கோவை: கோவையில் நடத்தப்பட்ட மீடியா டி-20 கிரிக்கெட் போட்டியில் டெக்கான் அணி வெற்றி பெற்றுள்ளது.


கோவை: கோவையில் நடத்தப்பட்ட மீடியா டி-20 கிரிக்கெட் போட்டியில் டெக்கான் அணி வெற்றி பெற்றுள்ளது.

ஸ்ரீ கிருஷ்ணா கல்லூரி சார்பில் 2-வது ஆண்டு இண்டர் மீடியா டி-20 கிரிகெட் போட்டி இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது. முதல் போட்டியில் டெக்கான் அணியும், டைம்ஸ் ஆப் இந்தியா அணியும் விளையாடின.

டாஸில் வெற்றி பெற்ற டைம்ஸ் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. 20 ஓவர் முடிவில் டைம்ஸ் அணி 8 விக்கெட் இழப்பிற்கு 129 ரன்களை எடுத்திருந்தது. அதிக பட்சமாக அர்ஜுனன் 36 ரன்கள் எடுத்திருந்தார். டெக்கான் சார்பாக பாரதி 4 விக்கெட்களை கைப்பற்றினார்.



130 ரன்கள் இலக்குடன் களம் இறங்கிய டெக்கான் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் 15.2 ஓவரில் வெற்றி பெற்றது. இந்த அணியில் அதிக பட்சமாக அர்ஜுன் 45 ரன்களும், வினோத் 41 ரன்களையும் எடுத்தனர். சிறப்பாக பந்து வீசிய பாரதி ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.

எக்ஸ்பிரஸ் அணி வெற்றி

மீடியா டி-20 கிரிக்கெட்டின் இரண்டாவது போட்டியில், இந்தியன் எக்ஸ்பிரஸ் அணியும் தினகரன் அணியும் மோதியது.

டாஸில் வெற்றி பெற்ற தினகரன் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. 18 ஓவர் முடிவில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 114 ரன்களை மட்டுமே எடுத்திருந்தது. அதிக பட்சமாக சதிஷ் 21 ரன்கள் எடுத்தார். எக்ஸ்பிரஸ் அணி சார்பாக தங்கராஜ் 4 விக்கெட்களை கைப்பற்றினார்.



115 ரன்கள் இலக்குடன் களம் இறங்கிய எக்ஸ்பிரஸ் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அதிக பட்சமாக கார்த்திக் 36 ரன்களும், தியாகராஜன் 34 ரன்களும் எடுத்தனர்.

18 பந்துகளில் 36 ரன்களை எடுத்த கார்த்திக் ஆட்ட நாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார்.

Newsletter