31 மாதங்களுக்குப் பிறகு இந்தியா வரும் பாக்., கிரிக்கெட் வாரிய குழு

பாகிஸ்தானுடன் நேரடி கிரிக்கெட் தொடர் ரத்து செய்யப்பட்டதன் காரணமாக 31 மாதங்களுக்குப் பிறகு அந்நாட்டு கிரிக்கெட் வாரிய குழு இந்தியா வருகிறது.


பாகிஸ்தானுடன் நேரடி கிரிக்கெட் தொடர் ரத்து செய்யப்பட்டதன் காரணமாக 31 மாதங்களுக்குப் பிறகு அந்நாட்டு கிரிக்கெட் வாரிய குழு இந்தியா வருகிறது.

போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி ஜம்மு காஷ்மீர் எல்லைப் பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால், அந்நாட்டுடனான நேரடி கிரிக்கெட் தொடருக்கு மத்திய அரசு தடை விதித்தது. இதனால், உலகக் கோப்பை, ஆசியக் கோப்பை போன்ற தொடர்களில் மட்டுமே இருநாட்டு அணிகளும் மோதுகின்றன. இந்தப் போட்டிக்கு இருநாட்டு ரசிகர்கள் மட்டுமின்றி உலகம் முழுவதும் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. இதனிடையே, இருநாடுகளுக்கு இடையே கிரிக்கெட் போட்டிகளை நடத்த பாகிஸ்தான் அரசு தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. ஆனால், அனைத்தும் தோல்வியிலேயே முடிந்தன.

இந்த நிலையில், மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவில் வரும் 21-ம் தேதி ஐ.சி.சி. கூட்டம் நடைபெறுகிறது. இக்கூட்டத்தில் கலந்து கொள்ளும் விதமாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய சேர்மன் நஜிம் ஜைதி மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி சுபான் அகமது தலைமையிலான பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய குழு இந்தியா வருகிறது. சுமார் 31 மாதங்களுக்குப் பின்னர் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய குழுவினர் இந்தியா வர உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இக்கூட்டத்தில், வீரர்களின் ஒழுங்குமுறை, சர்வதேச கிரிக்கெட்டின் அமைப்பு, டுவென்டி-20 போட்டியில் வீரர்கள் தேர்வு உட்பட பல்வேறு கருத்துக்கள் குறித்து விவாதிக்கப்பட உள்ளதாகக் கூறப்படுகிறது.

Newsletter