வேளாண் பல்கலையில் மாநில அளவிலான விளையாட்டுப் போட்டிகள் தொடக்கம்

கோவை : தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக கல்லூரிகளுக்கு இடையிலான விளையாட்டுப் போட்டிகள் இன்று தொடங்கியது.

கோவை : தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக கல்லூரிகளுக்கு இடையிலான விளையாட்டுப் போட்டிகள் இன்று தொடங்கியது. 



வேளாண்மைப் பல்கலைக்கழக கல்லூரிகளுக்கு இடையில் 5 நாள் நடைபெறும் மாநில அளவிலான விளையாட்டுப் போட்டிகளை கோவை மாநகர காவல்துறை ஆணையர் பெரியய்யா தொடங்கி வைத்தார். 



இந்த விளையாட்டு போட்டியில் 28 வேளாண் கல்லூரிகளை சேர்ந்த சுமார் 1700 மாணவர்கள் 16 வகையான போட்டிகளில் கலந்து கொள்கின்றனர். 



விழாவில் காவல் ஆணையர் பெரியய்யா பேசுகையில், " தலைமைப் பண்பு, ஒருங்கிணைந்து வழி நடத்துதல், ஒழுக்கம், போன்ற பல்வேறு நற்குணங்களை ஊக்குவிக்கும் வகையில் விளையாட்டுப் போட்டிகள் அமைகிறது. விளையாட்டு சமந்தமான அறிவை வளர்த்துக் கொள்வது தேர்வுகளில் மேலும் அதிக மதிப்பெண் பெற வழி வகை செய்யும்." என்றார்.

Newsletter