காமன்வெல்த் போட்டி : கடைசி நாளில் 23 தங்கங்களுடன் இந்தியா 3-வது இடம்

காமன்வெல்த் தொடரில் 23 தங்கப் பதக்கங்களுடன், பதக்கப்பட்டியலில் இந்தியா தொடர்ந்து 3-வது இடத்தில் நீடிக்கிறது.

காமன்வெல்த் தொடரில் 23 தங்கப் பதக்கங்களுடன், பதக்கப்பட்டியலில் இந்தியா தொடர்ந்து 3-வது இடத்தில் நீடிக்கிறது.

21-வது காமன்வெல்த் விளையாட்டு போட்டி ஆஸ்திரேலியாவின் கோல்டுகோஸ்ட் நகரில் நடந்து வருகிறது. இறுதிகட்டத்தை எட்டியுள்ள இந்த விளையாட்டு திருவிழாவில் 10-வது நாளான இன்றும் இந்திய அணியினரின் பதக்கத்தை வென்று குவிக்கின்றனர். 

*மகளிர் குத்துச்சண்டை 48 கிலோ எடைப்பிரிவில் இந்திய வீராங்கனை மேரிகோம் தங்கம் வென்றார்.

*ஆடவர் ஈட்டி எறிதல் போட்டியில் இந்திய வீரர் நீரஜ் சோப்ரா தங்கம் வென்றார்.

*குத்துச் சண்டையில் 52 கிலோ எடைப் பிரிவில் இந்திய வீரர் கவுரவ் சோலாங்கி தங்கம் வென்றார்.

*துப்பாக்கி சுடுதல் 50 மீட்டர் ரைபிள் பிரிவில் இந்திய வீரர் சஞ்சீவ் ராஜ்புத் தங்கம் வென்றார்.

*ஆண்கள் குத்துச்சண்டை 60 கிலோ எடைப்பிரிவில் இந்திய வீரர் மணீஷ் கவுசிக் வெள்ளி பதக்கம் வென்றார்.

*ஆண்கள் குத்துச்சண்டை 46-49 கிலோ எடைப்பிரிவில் இந்திய வீரர் அமித் வெள்ளி பதக்கம் வென்றார்.

இதன், மல்யுத்தம் பெண்கள் 'பிரீஸ்டைல்' (50 கி.கி.,) போட்டிகள், லீக் முறையில் நடந்தன. இதில், இந்தியா சார்பில் வினேஷ் போகத் பங்கேற்றார். களமிறங்கிய 3 போட்டிகளிலும் வென்ற வினேஷ் போகத், தங்கப்பதக்கம் கைப்பற்றினார். கடந்த 2014, கிளாஸ்கோ, தற்போது என, தொடர்ந்து இரு முறை காமன்வெல்த்தில் தங்கம் வென்று சாதித்தார். ஆண்கள் 125 கி.கி., பிரீஸ்டைல் (125 கி.கி.,) மல்யுத்த போட்டியில் இந்தியாவின் சுமித் மாலிக் பங்கேற்றார். லீக் முறையில் நடந்த நான்கு போட்டிகளிலும் வென்ற சுமித் மாலிக், தங்கத்தை தட்டிச் சென்றார். பெண்கள் 'பிரீஸ்டைல்' (62 கி.கி.,) போட்டிகள் லீக் முறையில் நடந்தன. இதில் பங்கேற்ற 4 போட்டிகளில் 2ல் மட்டும் வென்ற இந்தியாவின் சாக் ஷி மாலிக், வெண்கலப்பதக்கம் கைப்பற்றினார்.

இந்தப்போட்டி இன்றுடன் நிறைவடைய உள்ள நிலையில், இந்திய வீரர்களின் பதக்க வேட்டை தொடர்ந்து வருகிறது. இன்று இந்தியா இதுவரை 4 தங்கம், 2 வெள்ளி பதக்கங்களை பெற்றுள்ளது. இதன் மூலம் இந்தியா 23 தங்கம், 13 வெள்ளி, 14 வெண்கலம் உள்பட மொத்தம் 48 பதக்கங்களுடன் 3வது இடத்தில் தொடர்ந்து நீடிக்கிறது.

Newsletter