மிகக் குறைந்த வயதில் காமன்வெல்த்தில் தங்கம் வென்ற முதல் இந்தியர்

காமன்வெல்த் வரலாற்றில் குறைந்த வயதில் தங்கம் வென்ற முதல் இந்தியர் என்ற பெருமையை துப்பாக்கிச் சுடுதல் வீரர் அனிஷ் பன்வாலா பெற்றுள்ளார்.

காமன்வெல்த் வரலாற்றில் குறைந்த வயதில் தங்கம் வென்ற முதல் இந்தியர் என்ற பெருமையை துப்பாக்கிச் சுடுதல் வீரர் அனிஷ் பன்வாலா பெற்றுள்ளார்.

காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் ஆஸ்திரேலியாவின் கோல்டுகோஸ்ட் நகரில் நடைபெற்று வருகிறது. இதில் இந்திய வீரர்கள் தொடர்ந்து பதக்கங்கள் குவித்து வருகின்றனர். இன்று மகளிருக்கான 50 மீ. ரைபிள் துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் இந்தியாவின் தேஜஸ்வினி சவாந்த் தங்கப் பதக்கம் வென்றார். அதன்பின்னர், ஆடவருக்கான 25 மீட்டர் ரேபிட் பயர் பிஸ்டல் துப்பாக்கிச் சுடுதல் போட்டி நடைபெற்றது. இதில், இந்திய வீரர் அனிஷ் பன்வாலா தங்கம் வென்று அசத்தினார். இது இந்தியாவுக்குக் கிடைத்த 16-வது தங்கம் ஆகும்.

இதன்மூலம் 16 தங்கம், 8 வெள்ளி, 10 வெண்கலம் என மொத்தம் 34 பதக்கங்களுடன் பதக்கப் பட்டியலில் மூன்றாம் இடத்தில் நீடிக்கிறது.

இந்தியா சார்பில் 15 வயது அனிஷ் பன்வாலா, மிகக் குறைந்த வயதில் (15) தங்கம் வென்ற முதல் இந்தியர் என்ற வரலாறு படைத்தார். இதற்கு முன்னதாக, 1998-ல் அபினவ் பிந்த்ரா 15 வயதில் காமன்வெல்த்தில் பங்கேற்றதே சாதனையாக இருந்தது.

Newsletter